உலகம்

ஈரான் தாக்குதலில் சேதமடைந்த தென்கொரிய கப்பல் – மறுக்கும் தெஹ்ரான்

HMM (011200.KS) நிறுவனத்தால் இயக்கப்படும் ‘நமு’ என்ற தென்கொரியாவின் சரக்கு கப்பல் ஹார்மூஸ் ஜலசந்தியில் மே மாதம் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சேதங்கள் சரிசெய்யப்பட்டவுடன், ஜூலை மாத நடுப்பகுதியளவில் அப்பகுதியில் இருந்து வெளியேறும் என தென் கொரியாவின் கடல்சார் அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில், சரக்குக் கப்பலின் பின்பகுதிக்கு அருகில் அதன் அடிப்பாகம் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சியோல் கூறியதுடன், தனது விசாரணையின் முடிவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், எதிர்ப்புத் தெரிவிக்கவும் ஈரானிய தூதரை அழைத்துள்ளது.

இதேவேளை கப்பல் சேதமடைந்த விவகாரத்தில் தெஹ்ரானுக்கு தொடர்பு இல்லை என தென் கொரியாவிற்கான ஈரானின் தூதர் சயீத் கூசெச்சி (Saeed Koozechi) மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்