ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை
ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவருக்கு அனுராதப்புர நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் 3.074 கிராம் ஹெரோயின் வைத்திருந்தமைக்காக குற்றாவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
சுமார் 04 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நபர் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.




