காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி நீடிப்பு
காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐத் தேடும் பணியை மலேசியா மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் நீண்டகாலமாகத் தொடரும் மர்மங்களில் ஒன்றாக இந்த விபத்து கருதப்படுகின்றது. 239 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, 2014 மார்ச் எட்டாம் திகதி ரேடாரில் இருந்து திடீரென மறைந்து போனது. விமானத்தில் இருந்த பயணிகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பேர் சீன நாட்டவர்கள் ஆவர். […]













