“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹரா நிறுத்தப்படும் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தலதா மாளிகை மீது புலிகளைப் போல ஜே.வி.பியினர் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தவில்லை” – என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஜே.வி.பி. குறித்து மாய விம்பம் உருவாக்கம்: எதிரணிக்கு பாடமெடுத்த மகாநாயக்க தேரர்

  • October 13, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹரா நிறுத்தப்படும் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தலதா மாளிகை மீது புலிகளைப் போல ஜே.வி.பியினர் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தவில்லை” – என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் பௌத்த சாசனம் அவமதிக்கப்படுவதாகவும், மகா சங்கத்தினருக்கு எதிராகப் பிரச்சாரம் […]

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார். அரசியல் இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மொட்டு கட்சி வலியுறுத்து

  • October 13, 2026
  • 0 Comments

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார். அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அரசியல் பழிவாங்கலையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் […]

உலகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

  • October 13, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 364 முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது. அதே காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 114 முறைப்பாடுகளும் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய பிரச்சினைகள் குறித்து மொத்தம் 9,613 முறைப்பாடுகள்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.  இதில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 1,554 […]

உலகம்

பனாமாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

  • October 13, 2026
  • 0 Comments

பனாமாவில் நேற்று மீண்டும் 6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 35 கி.மீ (22 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக EMSC கூறியுள்ளது. நாட்டின் மத்திய மாகாணங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்திய 7.7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம்  ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் (aftershocks) பதிவாகின. இதனால் வார இறுதியில் அரசு தேசிய அவசரநிலையை அறிவித்தது. உயிரிழப்புகள் […]

பிரித்தானியாவின் RAF Fairford விமான படைத் தளத்தை குறிவைத்து நடத்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

RAF Fairford விமான தளம்மீது தாக்குதல் முயற்சி: ஈரானே காரணம் – UK பிரதமர் திட்டவட்டம்

  • October 12, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் RAF Fairford விமான படைத் தளத்தை குறிவைத்து நடத்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவின் போர் விமானங்கள் பயன்படுத்திய தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள RAF Fairford தளத்திற்கு அருகில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அதிகாலையில் ஐந்து பிரித்தானிய பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். இதைத் […]

சர்வதேச ஆண்கள் T- 20 கிரிக்கெட் வரலாற்றில் 2,000 சிக்சர்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணி படைத்துள்ளது. செய்தி விளையாட்டு

T-20 போட்டிகளில் 2000 சிக்ஸர்களை அடித்து மே.தீவுகள் அணி சாதனை

  • October 12, 2026
  • 0 Comments

சர்வதேச ஆண்கள் T- 20 கிரிக்கெட் வரலாற்றில் 2,000 சிக்சர்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணி படைத்துள்ளது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்தாலும் (இந்தியா 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது), இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியது. இந்திய அணியின் 223 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் […]

இலங்கை

நாடு முழுவதும் 75 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க அரசாங்கம் உறுதி

  • October 12, 2026
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலம் நாடு முழுவதும் 75 புதிய எரிபொருள் நிலையங்கள் திறக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு  2026-ல் பங்கேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  தனியார் துறை எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி, வரம்பற்ற இலாபங்களை ஈட்ட முயற்சிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன்படி, தனியார் எரிபொருள் நிலையங்கள் மட்டுமே அமைந்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, […]

ஐரோப்பா

Brexit-இற்கு பின் உள்ள உறவுகள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து

  • October 12, 2026
  • 0 Comments

பிரெக்ஸிட்டுக்குப் பின்பு பிரித்தானியாவின் உறவை மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆண்டி பர்னம் கேட்டுக்கொண்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம்-ஐக்கிய ராச்சிய உச்சி மாநாட்டிற்கு முன்னதாகப் பேசிய பிரதமர், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,  பிரஸ்ஸல்ஸுடன் சிறந்த நிபந்தனைகளைப் பேச்சுவார்த்தை மூலம் பெறுவதற்கான வாய்ப்பைப் புறக்கணிப்பது கடமைத் தவறுவதற்கு சமம் எனத் தெரிவித்தார். இதற்கிடையே வரவிருக்கும்  ஐரோப்பிய ஒன்றியம்-ஐக்கிய ராச்சிய உச்சி  மாநாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை […]

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் பிரபல நடுவருமான சாரா தம்பனேவனா (Sarah Dambanevana) திங்கள்கிழமை ஹராரேவில் தனது 36 ஆவது வயதில் காலமானார். செய்தி விளையாட்டு

இளம் வயதில் காலமான சர்வதேச நடுவர்: ஜிம்பாவேயில் சோகம்

  • October 12, 2026
  • 0 Comments

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் பிரபல நடுவருமான சாரா தம்பனேவனா (Sarah Dambanevana) திங்கள்கிழமை ஹராரேவில் தனது 36 ஆவது வயதில் காலமானார். கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாக ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 2 ஆம் திகதி தனது சர்வதேச நடுவர் பயணத்தைத் தொடங்கிய சாரா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற […]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டியுள்ளதுடன், நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் களத்தடுப்பில் அதிக கேட்சுகளை Catches பிடித்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்

  • October 12, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டியுள்ளதுடன், நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் களத்தடுப்பில் அதிக கேட்சுகளை Catches பிடித்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் 219 கேட்சுளுடன் இங்கிலாந்தின் ஜோ ரூட்டுடன் சமநிலையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், நேற்று ஒரே நாளில் நான்கு கேட்சுகளை பிடித்து தனது மொத்த கேட்சுகளின் எண்ணிக்கையை 223 ஆக உயர்த்தி உலக சாதனை […]