இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

  • May 5, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளான இருவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது அதிவேகமகா வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இந்த உயிரழப்புகள் பதிவாகியுள்ளன. உயிரழந்தவர்களில் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டு, உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் […]

உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் உச்சக்கட்ட மோதல் : ஈரானின் 07 அதிவேகப் படகுகள் மீது தாக்குதல்!

  • May 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில்   ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “ஈரானின் 7 அதிவேகப் படகுகளை நாங்கள் அழித்துவிட்டோம். மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு யாராவது தடையோ அல்லது இடையூறோ விளைவித்தால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், ஈரானின் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா எண்ணெய் துறைமுகத்தில் பெரும் […]

அரசியல் இலங்கை செய்தி

தளபதி விஜய்க்கு இலங்கை நாடாளுமன்றில் வாழ்த்து!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவரான இரா. சாணக்கியன் எம்.பி. இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார். ” தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ்நாடு அரசோடும், தமிழக மக்களோடும் ஈழத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக வேலை செய்வதற்கு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஒரு வாக்கால் வெற்றியை பறிகொடுத்த முன்னாள் அமைச்சர்!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் சிவகங்கை திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். முன்னாள் அமைச்சரான அவரின் இந்த தோல்வி தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி தவெகவின் வெற்றியை 108ஆக மாற்றுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளார். திமுக வேட்பாளர் பெரியகருப்பனுக்கும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே இறுதிவரை இழுபறி நீடித்த நிலையில், இறுதிசுற்றில் இருவருக்கும் இடையே […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஆட்சியமைக்க 14 நாள் அவகாசம்: ஆளுநருக்கு விஜய் கடிதம்!

  • May 5, 2026
  • 0 Comments

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு, தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை எனில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்படுள்ளது. இந்நிலையில், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பெரும்பான்மையை […]

உலகம்

கச்சா எண்ணெயின்  விலை 06 சதவீதத்தால் உயர்வு!

  • May 5, 2026
  • 0 Comments

கடந்த 24 மணிநேரத்தில் மத்தியக் கிழக்கில் நடத்தப்பட்ட உச்சக்கட்ட தாக்குகுதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 6 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. இதன்படி பிரண்ட் கச்சா எண்ணெயின்  விலை பீப்பாய்க்கு $6.79 அல்லது 6.3 சதவீதம் உயர்ந்து $114.96 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை $4.23 அல்லது 4.2 சதவீதம் உயர்ந்து $106.17 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக பதவியேற்பதற்கு விஜய் தயாராகி வருகின்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளை வென்றுள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு 118 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. விஜய் இரட்டை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அக்கட்சியில் இருந்து ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே, […]

இந்தியா

தமிழகத்தின் புதிய தலையெழுத்து! த.வெ.க அமோக வெற்றி

  • May 5, 2026
  • 0 Comments

இந்தியாவில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்தக்கட்சிக்கு அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அத்துடன் அந்தக்கட்சியின் தலைவரான ஜோசப் விஜய் தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மு.க.ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக்கழகம் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட […]

இலங்கை செய்தி

கணவனை கொலைசெய்து சடலத்தை மலசலக்கூட குழிக்குள் வீசிய மனைவி: மன்னாரில் கொடூரம்!

  • May 5, 2026
  • 0 Comments

குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய பெண்ணொருவர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மூர் வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனைத் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சடலத்தைத் துண்டு துண்டுகளாக […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை தமிழர்களுக்கு தவெக ஆதரவு தொடரவேண்டும்!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ் நாட்டு சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டு மக்களதும், அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.” […]