ஈரான் பயணம் – இந்திய குடிமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக அங்கு செல்வதை தவிர்க்குமாறு இந்திய மத்திய அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது.
ஈரானில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை அங்கு செல்வதை தள்ளிவைக்குமாறும், ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் கிடைக்கக்கூடிய வணிக ரீதியான விமான சேவைகள் மூலம் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலில், “சமீப நாட்களாக ஈரானில் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்துள்ளன என்றும், இதனால் இந்திய குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஈரானுக்கு செல்ல திட்டமிடும் இந்திய குடிமக்கள், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும். அவர்கள் நிலவரத்தை முழுமையாக அறிந்துகொள்ள செய்திகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
மேலும் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் உதவி தேவைப்படும் குடிமக்களுக்காக அவசர உதவி எண்களையும் இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது.





