சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக ஹுதிகள் அறிவிப்பு
சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக ஹுதிகள் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையானது வளைகுடா நாடுகளுக்கு அப்பால் எரிசக்தி விநியோகத்தை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தொடர்ந்து தாக்கினால், செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb ) நுழைவாயிலை மூடுமாறு ஈரான் ஹூதிகளை வலியுறுத்தியிருந்தது.
இதற்கமைய ஹூதிகளின் ஆயுதப் படைகள், ‘கண்ணுக்குக் கண்’ என்ற சமன்பாட்டின் அடிப்படையில், குற்றவாளியான சவூதி எதிராக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒரு கடல்வழித் தடையை அறிவிப்பதாக”க் கூறியுள்ளன.
இது தொடர்பில் சவூதி அரேபியாவிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.
ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா நேற்று இரவு முழுவதும் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





