உலகம்

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து – 21 பேர் பலி!

  • May 5, 2026
  • 0 Comments

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில்   21 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரின் லியுயாங் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. களத்தில்  சுமார் 500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக தொழிற்சாலையின் நிர்வாகிகளைப் […]

உலகம் செய்தி

ஈரான் முழுமையாக அழிக்கப்படும்: ட்ரம்ப் ஆவேசம்!

  • May 5, 2026
  • 0 Comments

அமெரிக்க கப்பல்கள்மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்தநாடு முழுமையாக அழிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை மீட்பதற்கான ‘Project Freedom’ என்ற நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களில் ஈரானிய படகுகள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு!

  • May 5, 2026
  • 0 Comments

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா அந்தப் பகுதியில் தடையை விதித்துள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஈரான் இன்னும் தனது எதிர்ப்பைத் தீவிரமாகத் தொடங்கவில்லை என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

“யாழ்ப்பாணத்தை தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள்” – அர்ச்சுனா எம்.பி.

  • May 5, 2026
  • 0 Comments

” கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்துவிடுங்கள்.” – என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. கூறியவை வருமாறு, ” தமிழ் மக்களின் இதயத்தை கவர்த்த தமிழக முதல்வர் விஜய்க்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன். வடக்கு மாகாணத்தில் தீவு பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. நெடுந்தீவுக்கு அண்மையில் நான் சென்றபோது அங்கு […]

இந்தியா

முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்

  • May 5, 2026
  • 0 Comments

தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அஸ்தஸ்தை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்தி விளையாட்டு

சென்னை, டெல்லி அணிகள் இன்று மோதல்!

  • May 5, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (05) நடைபெறும் 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். நடப்புத் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் சென்னை அணி 9 ஆட்டங்களில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 6-வது இடத்தில் […]

செய்தி விளையாட்டு

மும்பை அணி அபார வெற்றி!

  • May 5, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 47 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய போட்டியிலும் ஒரு கட்டத்தில் தோற்று விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. நிகோலஸ் பூரன் 21 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசிய போது மும்பை அணி கையைப் பிசைந்து கொண்டு நின்றது. அப்படியே விட்டிருந்தால் லக்னோ 250 ஓட்டங்களை எடுத்திருக்கும். […]

இலங்கை செய்தி

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் விபத்து: 13 பேர் காயம்!

  • May 5, 2026
  • 0 Comments

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட நாவலப்பிட்டி, கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனொன்று இன்று (05) காலை விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில், நாவலப்பிட்டி – திஸ்பனே சந்தி பகுதியில் குறித்த வேன் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வேனின் சாரதியும் காயமடைந்த நிலையில் […]

இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

  • May 5, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளான இருவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது அதிவேகமகா வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இந்த உயிரழப்புகள் பதிவாகியுள்ளன. உயிரழந்தவர்களில் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டு, உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் […]

உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் உச்சக்கட்ட மோதல் : ஈரானின் 07 அதிவேகப் படகுகள் மீது தாக்குதல்!

  • May 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில்   ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “ஈரானின் 7 அதிவேகப் படகுகளை நாங்கள் அழித்துவிட்டோம். மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு யாராவது தடையோ அல்லது இடையூறோ விளைவித்தால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், ஈரானின் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா எண்ணெய் துறைமுகத்தில் பெரும் […]