இந்தியா செய்தி

உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி – 163 தடை உத்தரவு அமுலில்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளில் 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீட் பரீட்சை முறைக்கேடு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பு, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றது.

இதன்காரணமாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் பேரணியை கலைக்க பொலிஸார் தடியடி நடத்தினர்.

மறுபுறம், நீட் விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி பொலிஸார், துணை ராணுவப் படையினர் மற்றும் அதிரடிப்படையினர் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாகவே தற்போது 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி