இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு: உச்சநீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்!

  • May 8, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது. மறுபுறத்தில் விஜய்க்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அதேபோல திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை […]

அரசியல் இலங்கை செய்தி

அர்ச்சுனா எம்.பி. தீவிரவாதியா? சர்ச்சையைக் கிளப்பும் தேரர்!

  • May 8, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வைத்தியரா அல்லது தீவிரவாதியா என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்து விடுங்கள் என அர்ச்சுனா தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ” கச்சத்தீவு மீளப்பெறப்படும் என விஜய் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் நாம் அன்று கதைக்க முற்படும்போது, ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்று, அதனை வழங்கமாட்டோம் என உறுதியளித்தார். ஆனால் நாடாளுமன்ற […]

இலங்கை செய்தி

செம்மணியில் கைக்குழந்தையின் என்புத் தொகுதி மீட்பு!

  • May 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 10ஆம் நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி உட்பட நான்கு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. முன்னதாக அடையாளம் காணப்பட்டவற்றிலிருந்து, ஒரு சிறு குழந்தையின் என்புத் தொகுதி உட்பட இரண்டு மனித என்புத் தொகுதிகள் நேற்று […]

உலகம்

சீனாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

சீனாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெய் ஃபெங்ஹே  (Wei Fenghe)  மற்றும் லி ஷாங்ஃபு (Li Shangfu) ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்கள் இன்று இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது இரண்டு வருட கால அவகாசத்துடன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும். மேலும் தண்டனைக் […]

உலகம்

பரம எதிரியை சந்திக்கும் ட்ரம்ப் : தைவான் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சீனாவிற்கு பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தன்போது  தைவான் விவகாரத்தில் சீனா சில “தந்திரமான நகர்வுகளை” செய்ய முயற்சிக்கக்கூடும் என்று தைவானின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தைபேயில் உள்ள நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்புப் பணியகத்தின் தலைமை இயக்குநர் சாய் மிங்-யென் (Tsai Ming-yen ), ட்ரம்ப் மற்றும்  ஷி இடையேயான உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம், “அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இல்லாமல்”, அவர்களின் […]

இந்தியா முக்கிய செய்திகள்

விஜய்க்கு வந்த சிக்கல் : தி.மு.க, அ.தி.மு.க கைக்கோர்க்குமா? ஆளுநர் பதில்!

  • May 7, 2026
  • 0 Comments

தமிழகத்தில் தற்போது தொங்கு சட்டசபை உருவாகியுள்ள நிலையில், ஆட்சியமைக்க த.வெ.க போராடி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் , காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளதால்  தற்போது 113 இடங்களை தம்வசம் வைத்துள்ளது. இந்நிலையில் ஆட்சியமைக்க மேலும் 05 இடங்கள் தேவைப்படுவதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. இந்த சூழலில், தி.மு.கவும், அ.தி.மு.கவும் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா என ஆங்கில ஊடகம் ஒன்று ஆளுநர் அர்லேகரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த ஆளுநர் அதுவும் சாத்தியமே எனக் கூறியதுடன், இன்னும் […]

ஐரோப்பா

சீனாவிற்காக உள்துறை அமைச்சகத்தின் கணினி அமைப்பை நோட்டமிட்ட பொலிஸ் அதிகாரி கைது!

  • May 7, 2026
  • 0 Comments

சீனாவிற்காக உளவு பார்த்த இருவரை பிரித்தானிய நீதிமன்றம்  குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளது. சீன-பிரிட்டிஷ் இரட்டைக் குடியுரிமை பெற்ற பீட்டர் வாய் (38) மற்றும் பில் யுவன் (65) ஆகிய இருவரும், ஓல்ட் பெய்லியில் இன்று  நடந்த விசாரணையைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஹொங்காங் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்தின் கணினி அமைப்பை  நோட்டமிட்டதற்காகவும், பொது அலுவலகத்தில் முறைகேடாக நடந்துகொண்டதற்காகவும் பீட்டர் வாய் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

நேட்டோ நாட்டின் மீது ஆளில்லா விமான தாக்குதல்!

  • May 7, 2026
  • 0 Comments

நேட்டோ உறுப்பு நாடான லாட்வியாவிற்குள் இன்று இரண்டு ஆளில்லா விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஆளில்லா விமானங்கள் “ரஷ்யாவில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து உக்ரைனால் ஏவப்பட்டிருக்கலாம்” என்று லாட்வியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரிஸ் ஸ்ப்ருட்ஸ் ( Andris Spruds ) சந்தேகம் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, பன்னாட்டு நேட்டோ பால்டிக் வான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இராணுவ விமானங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய எல்லையிலிருந்து […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உணர்வோடு அணுகவேண்டும்!

  • May 7, 2026
  • 0 Comments

“வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நற்செய்தி : இலவச விசா அணுகல்!

  • May 7, 2026
  • 0 Comments

பிரித்தானியா, ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட மேலும் 40 நாடுகளுக்கு  இலவச விசா வசதியை  வழங்க இலங்கை நாடாளுமன்றம்  ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார். தொடர்புடைய முன்மொழிவு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெலாரஸ், ​​பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, […]