ஐரோப்பா

நெதர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு!

  • May 8, 2026
  • 0 Comments

நெதர்லாந்தின் ஆளும் கட்சியான D66 கட்சியின் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு பதிவாகியுள்ளது. ஹேக் நகரின் மையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு 09 மணிக்கு பிறகு இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். D66 கட்சியின் தலைவராகவும் இருக்கும் டச்சுப் பிரதமர் ராப் ஜெட்டன், கட்டிடத்தின் முன்வாசலில் உள்ள தபால் பெட்டி வழியாக பட்டாசுகளால் செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதாகக் கூறினார். […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளது!

  • May 8, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நிறுத்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையே ஏற்பட்ட நேரடி மோதல்கள் காரணமாகப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அமெரிக்காவின் மூன்று போர்க்கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ‘ஈரான் இன்று நம்முடன் விளையாடிப் பார்த்துள்ளது’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், […]

இலங்கை செய்தி

வியட்நாம் ஜனாதிபதியை வியக்கவைத்த இலங்கையின் பிரமாண்ட வரவேற்பு!

  • May 8, 2026
  • 0 Comments

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாமை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வியட்நாம் மற்றும் இலங்கைக்கிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பொலிஸ் குதிரைப்படைப் பிரிவினரின் மரியாதையுடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு வியட்நாம் ஜனாதிதி அழைத்துவரப்பட்டார். இரு நாடுகளினதும் தேசிய […]

இலங்கை செய்தி

வியட்நாம், இலங்கைக்கிடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 8, 2026
  • 0 Comments

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (TO LAM) ஆகியோர் முன்னிலையில் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வியட்நாம் – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலாத் துறை, பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பு, மதம், சிவில், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பொருளாதாரம், விஞ்ஞானம் […]

விளையாட்டு

டெல்லி, கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

  • May 8, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 51 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற […]

செய்தி பொழுதுபோக்கு

சரிகமபவில் பரபரப்பு: நடுவர்கள் சொன்ன வார்த்தை.. யார் அடுத்த இறுதி போட்டியாளர்?

  • May 8, 2026
  • 0 Comments

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இசை நிகழ்ச்சி Saregamapa Lil Champs Season5 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. யார் அடுத்த இறுதி போட்டியாளராக தேர்வாக போகிறார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. காலம் கலந்து ஜொலிக்கும் பாடல்களுடன் “ நெஞ்சம் மறப்பதில்லை சுற்று” இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீ இல்லாத பைனலிஸ்ட் எங்க கண்ணுல படலனு எஸ். பி. சரண் கூறும் […]

விளையாட்டு

தொடர் தோல்வியிலிருந்து மீண்டது லக்னோ அணி!

  • May 8, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 50 ஆவது லீக் ஆட்டத்தில் இறுதி பந்துவரை பரபரப்பும், விறுவிறுப்பும் ஏற்பட்டது. இப்போட்டியில் Lucknow Super Giants அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மழை காரணமாக 19 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்களைப் பெற்றது. 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை Royal Challengers Bengaluru விரட்டியது. […]

உலகம் செய்தி

பெண் அடிமை வியாபாரம் , IS ஆதரவு: தாயகம் திரும்பிய ஆஸ்திரேலியப் பெண்கள் மீது வழக்கு!

  • May 8, 2026
  • 0 Comments

சிரியா அகதி முகாமில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பிய மூன்று பெண்கள் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவர் சிரியாவில் இருந்தபோது பெண்ணொருவரை அடிமை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை மாலை ஆஸ்திரேலியா வந்தடைந்த குழுவில் குறித்த பெண்களும் அவர்களது குழந்தைகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் டமாஸ்கஸிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் மற்றும் சிட்னிக்கு அழைத்து வரப்பட்டனர். ஐ.எஸ். ஆமைப்புடன் தொடர்புடைய குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இன்று வெள்ளிக்கிழமை அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐ.எஸ். […]

உலகம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு!

  • May 8, 2026
  • 0 Comments

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைந்த இரண்டு கப்பல்களை அமெரிக்கா குறிவைத்ததாகவும், ஈரானியப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஈரானிய இராணுவம் கூறியது. அதேநேரம் ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாங்கள் சுட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் தற்போது நிலமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேநேரம் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு மற்றும் பிரதான […]

இலங்கை செய்தி

கைது உத்தரவு: SriLankan Airlines முன்னாள் CEO சடலமாக மீட்பு!

  • May 8, 2026
  • 0 Comments

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே இன்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். […]