விளையாட்டு

தொடர் தோல்வியிலிருந்து மீண்டது லக்னோ அணி!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 50 ஆவது லீக் ஆட்டத்தில் இறுதி பந்துவரை பரபரப்பும், விறுவிறுப்பும் ஏற்பட்டது.

இப்போட்டியில் Lucknow Super Giants
அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

மழை காரணமாக 19 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.

210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை Royal Challengers Bengaluru விரட்டியது.

அவ்வணியால் 19 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

கடைசி 2 பந்துகளில் ஆர்சிபி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அதில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து LSG அணியை வெற்றி பெற செய்தார் திக்வேஷ்.

இதன் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது LSG அணி. அந்த அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!