நெதர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு!
நெதர்லாந்தின் ஆளும் கட்சியான D66 கட்சியின் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு பதிவாகியுள்ளது.
ஹேக் நகரின் மையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு 09 மணிக்கு பிறகு இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும் அர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
D66 கட்சியின் தலைவராகவும் இருக்கும் டச்சுப் பிரதமர் ராப் ஜெட்டன், கட்டிடத்தின் முன்வாசலில் உள்ள தபால் பெட்டி வழியாக பட்டாசுகளால் செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதாகக் கூறினார்.
இதை அவர் “ஒரு கோழைத்தனமான அச்சுறுத்தல் செயல்” என்று விவரித்துள்ளார்.




