“இலங்கையில் மரண தண்டனையை அமுலாக்குவது குறித்து இன்னும் முடிவு இல்லை”
இலங்கையில் மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் என அமைச்சரவையில் எந்தவொரு கொள்கை ரீதியிலான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். “இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “மரண தண்டனை தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆனால், அது அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் அல்ல. அவ்வாறான எந்தவொரு கொள்கைத் தீர்மானத்தையும் அமைச்சரவை எடுக்கவில்லை […]













