வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 06.00 மணி முதல் நாளை வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், பகல் நேரத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு “எச்சரிக்கை” மட்டத்தில் நீடிக்கக்கூடும்.
அதன்படி, அப்பகுதி மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், இலகுவான ஆடைகளை அணியவும், மேலும் முதியவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.




