அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்குவாரா ரணில்?

  • May 28, 2026
  • 0 Comments

” ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை.” என்று ஐதேக உறுப்பினரான , ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார், தேசிய அரசமையவுள்ளது என்றெல்லாம் வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ரணில் விக்கிரமசிங்க அல்ல, ஏனையோர்தான் இது பற்றி கருத்து வெளியிட்டுவருகின்றனர். ஐதேக தலைவராக நாட்டில் வகிக்க வேண்டிய உச்ச பதவியை அவர் வகித்துவிட்டார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சந்திரனில் மனிதர்களை தரையிறக்க நாசா முயற்சி !! போட்டிக்கு வந்த சீனா!

  • May 27, 2026
  • 0 Comments

சந்திரனில் தளம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தையும், அதற்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாகனங்களையும் நாசா சமீபத்தில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியது. இந்தத் திட்டங்களில்  ரோபோ தரையிறங்கி, ட்ரோன்கள் மற்றும்  பிற வாகனங்கள் அடங்கியுள்ளன. 2029 இல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்குவதே நாசாவின் திட்டமாகும். மேலும், 2032-க்குள் சந்திரனின் தென் துருவத்தில் 20 பில்லியன் டொலர் செலவில் அணுசக்தி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும்  தளமொன்றை  அமைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். […]

உலகம்

ஏவுகணை அமைப்பில் AI தொழில்நுட்பம் : முதல் முறையாக ஒப்புக்கொண்ட வடகொரியா!

  • May 27, 2026
  • 0 Comments

வட கொரியா தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை  பயன்படுத்தியுள்ளது. அரசு நடத்தும் கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம்  இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இலகுரக பல்நோக்கு ஏவுகணை ஏவுதல் அமைப்பு மற்றும் பல தந்திரோபாய பயண ஏவுகணை ஆயுத அமைப்பு” ஆகியவற்றைச் சோதிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “சோதனை முடிவுகளை  பாராட்டிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்,  தொழில்நுட்ப பயன்பாடு குறித்து மிகவும் திருப்தியடைந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

கடும் வெப்பஅலை : சாலைகள் உருகும் அபாயம்!! சாரதிகளுக்கு எச்சரிக்கை!

  • May 27, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, சாலைகள் உருகுதல் மற்றும் டயர் வெடிப்புகளால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனின் கியூ கார்டன்ஸில் ( Kew Gardens)  வெப்பநிலை 35.1°C-ஐ எட்டியதைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆங்கிலியாவில் உள்ள பல சாலைகள் ஏற்கனவே வெப்பத்தால் உருகிவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் அதிக வெப்பநிலையானது பழைய அல்லது சேதமடைந்த வாகன டயர்களுக்கு “அழுத்தத்தை” அளித்து, “பஞ்சர்கள், சுவர் உடைவுகள் மற்றும் […]

உலகம் செய்தி

20 விமான நிலையங்களை மீளக் கட்டியெழுப்பியது ஈரான்!

  • May 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் சேதமடைந்த ஈரானின் Tabriz சர்வதேச விமான நிலையம் (Tabriz International Airport) மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. ஈரானின் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதன்கிழமை முதல் விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு ஈரானில் இயல்பு நிலைக்குத் திரும்பிய 20 ஆவது விமான நிலையமாக இது கருதப்படுகின்றது. ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு […]

ஐரோப்பா

லண்டன் – பல்பொருள் அங்காடியில் தீவிபத்து!

  • May 27, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இன்று பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, பெரிய அளவிலான அவசரகால மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் 15 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மின்சார கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தினால் எ்வ்வித காயங்களும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் புகை மூட்டம் காரணமாக மக்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை வென்றெடுக்க ‘கூட்டு அரசியல் சமர்’ முன்னெடுப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே எதிரணி தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த வலியுறுத்தலை விடுத்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழுக்கு முதலிடம்: மீனவர்கள் விடுவிப்பு! பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

  • May 27, 2026
  • 0 Comments

“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் டெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக […]

அரசியல் இலங்கை செய்தி

முப்படைகளை பலப்படுத்தவும்: பொன்சேகா அவசர அறைகூவல்!

  • May 27, 2026
  • 0 Comments

“பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. இராணுவம் வலுப்படுத்த வேண்டுமேதவிர, படை குறைப்பு செய்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “எமது நாடு மூன்று தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியை சந்தித்த நாடாகும். அதேபோல வெளியக அழுத்தங்களும் வரக்கூடும். எனவே, பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. முப்படைகள் பலமாக இருக்க […]

ஐரோப்பா

பிரான்ஸில் வாகனம் ஓட்டும்போது இந்த தவறை செய்தால் 35 யூரோ அபராதம்!

  • May 27, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது இசையை ஒலிக்கச் செய்தல் அல்லது மாற்றுதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் செயற்பாடுகளை செய்யும்பொழுது அபராதம் விதிக்கப்படும். இந்த செயன்முறை வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. அதாவது வாகனம் ஓட்டும் போது சாரதிகள் வேறு எந்த செயற்பாடுகளை செய்தாலும் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை முதல் மூன்று முறை குற்றம் இழைப்பவர்களுக்கு பொருந்தும். மூன்று முறையை […]