ஐரோப்பா

பிரான்ஸில் வாகனம் ஓட்டும்போது இந்த தவறை செய்தால் 35 யூரோ அபராதம்!

  • May 27, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது இசையை ஒலிக்கச் செய்தல் அல்லது மாற்றுதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் செயற்பாடுகளை செய்யும்பொழுது அபராதம் விதிக்கப்படும். இந்த செயன்முறை வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. அதாவது வாகனம் ஓட்டும் போது சாரதிகள் வேறு எந்த செயற்பாடுகளை செய்தாலும் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை முதல் மூன்று முறை குற்றம் இழைப்பவர்களுக்கு பொருந்தும். மூன்று முறையை […]

உலகம்

முழு வளைகுடாக் கடற்கரையையும் கொலைக்களமாக மாற்றுவோம் – IRGC எச்சரிக்கை!

  • May 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால் ஈரானின் முழு வளைகுடாக் கடற்கரையையும் ஒரு கொலைக்களமாக மாற்றிவிடுவோம் என்று ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. அமெரிக்கா மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினால், “சபஹார் முதல் மஹ்ஷஹர் வரையிலான பகுதியை ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக ஈரான் மாற்றிவிடும்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். “எதிரியுடன் நேருக்கு நேர் போரிடும் உந்துதலை எங்கள் போராளிகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சீனாவில் மனித உருவ ரோபோக்களை கண்காணிக்க டிஜிட்டல் அடையாள எண்கள் அறிமுகம்!

  • May 27, 2026
  • 0 Comments

சீனா தனது அனைத்து மனித உருவ ரோபோக்களுக்கும் அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் சிறப்பாகக் கண்காணிக்க தனித்துவமான டிஜிட்டல் அடையாள எண்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. சீனா இந்தத் துறையில் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்க முற்படுவதால், மனித உருவ ரோபோ தயாரிப்புகளில் உள்ள பாதுகாப்பு அபாயங்களை, குறைப்பதற்காக  இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மனித உருவ ரோபோக்களை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் தனித்துவமான அடையாள எண்களை எவ்வாறு கண்காணிப்பது என்பது குறித்த புதிய வழிகாட்டுதல்களையும் சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்தத் தனித்துவமான […]

உலகம் செய்தி

போர்சேதத்திற்குப் பிறகு தப்ரிஸ் விமான நிலையம் மீண்டும் திறப்பு

  • May 27, 2026
  • 0 Comments

வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள தப்ரிஸ் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. சமீபத்திய போரின்போது தாக்குதலுக்குள்ளான இந்த விமான நிலையம், ஈரானிய நிபுணர்களின் புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவைகள் தற்போது படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மீண்டும் […]

உலகம் செய்தி

எதிரிகள் கலப்புப் போர் முறைகளை கையாளுகின்றனர் – ஈரான் உளவுத்துறை குற்றச்சாட்டு

  • May 27, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக செயல்படும் தரப்புகள் தற்போது “கலப்புப் போர்” (Hybrid Warfare) முறைகளை பயன்படுத்தி வருகின்றன என்று ஈரான் உளவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர்க்களத்தில் எதிரிகள் தோல்வியடைந்ததால், அவர்கள் தற்போது பொருளாதார அழுத்தம், இணையத் தாக்குதல்கள், ஆயுதக் கடத்தல், படுகொலை முயற்சிகள் மற்றும் ஊடகப் பிரச்சாரங்கள் போன்ற மாற்று தந்திரங்களை கையாளுகின்றனர் என அந்த அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், “இராணுவ ரீதியாக தோல்வியடைந்த எதிரி, இப்போது மென்போர், அறிவாற்றல் போர் மற்றும் சமூகக் குழப்பங்களை தூண்டும் […]

உலகம் செய்தி

லாவோஸில் குகைக்குள் சிக்கிய ஏழு பேரில் ஐவர் உயிருடன் மீட்பு!

  • May 27, 2026
  • 0 Comments

லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகை ஒன்றிற்குள், கடந்த மே 20 ஆம் திகதி 7 பேர் சென்றுள்ளனர். அப்போது பெய்த கனமழையால் குகையின் நுழைவாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு அவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர் கால்பந்து […]

உலகம் செய்தி

எதிரிகளின் கலப்பு போர்முறை குறித்து ஈரான் உளவுத்துறை எச்சரிக்கை!

  • May 27, 2026
  • 0 Comments

நேரடி ராணுவ மோதல்களில் தோல்வியடைந்த எதிரிகள் தற்போது கலப்புப் போர் (hybrid warfare) முறைகளைக் கையாள்கின்றனர் என்று ஈரான் உளவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரத் தடைகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் சிந்தனையை மாற்ற எதிரணிகள் முயற்சிக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ” சமூகத் தூண்டுதல்கள் மற்றும் உளவியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் நாட்டை நிலைநடுங்கச் செய்ய எதிரிகள் திட்டமிடுகின்றனர். பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது உளவு வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எதிராக […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஒன்றிணைந்தது அதிமுக! சட்டமன்றத் தலைவரானார் பழனிசாமி!!

  • May 27, 2026
  • 0 Comments

அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்ததையடுத்து தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் சங்கமித்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக்க நியமிக்குமாறுகோரி, சபாநாயகரிடம் கடிதம் கையளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்தனர். அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக […]

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்மீது தாக்குதல்: ஈரான் தூதுவருக்கு தென்கொரியா அழைப்பாணை!

  • May 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் HMM Namu என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய தயாரிப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சு நடத்திய தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் மற்றும் அதன் வெடிபொருட்களின் நிறத்தை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வருமாறு ஈரானியத் தூதருக்கு தென்கொரிய அரசு சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சர்வதேச […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் மீண்டும் உயர்கிறது எரிசக்தி கட்டணம்!

  • May 27, 2026
  • 0 Comments

சர்வதேச அளவில் எரிவாயுவின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதால் பிரிட்டனில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் 13 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளன. பிரிட்டனின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான Ofgem , ஆண்டுக்கான சராசரி கட்டண வரம்பை £1,862 ஆக நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தை விட £221 அதிகமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் பொருளாதார நெருக்கடியை […]