உலகம் செய்தி

“இஸ்ரேலின் உயிர்நாடி அமெரிக்காவின் கைகளுக்குள்”

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “நான் இல்லாவிட்டால் இங்கு இஸ்ரேல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இஸ்ரேலுக்காக நான் செய்த காரியங்களைச் செய்வதற்கு வேறு எந்தவொரு ஜனாதிபதியும் தயாராக இருந்திருக்கவில்லை” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனக்கு மிகச் சிறந்த நட்பு இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் […]

செய்தி விளையாட்டு

உலகக்கிண்ண தொடரில் ஈரானுக்கு பெரும் அநீதி!

  • June 16, 2026
  • 0 Comments

ஈரான் அணி வீரர்கள், உலகக்கோப்பை தொடரில் மிகுந்த அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாக ஈரானியக் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் Amir Ghalenoei கவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டி முடிந்தவுடன், வீரர்கள் உடனடியாக மெக்சிகோவிற்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையிலேயே, அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். விசா சிக்கல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக பயிற்சியைத் தொடங்குவதில் ஈரான் அணியினர் ஏற்கனவே பல தடைகளை எதிர்கொண்டனர். போதிய ஓய்வு மற்றும் உடல்நல […]

உலகம் செய்தி

அணு ஆயுதம் குறித்து 2ஆம் சுற்றிலேயே பேச்சு!

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைகள் இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதல் கட்டத்தில் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் அணுசக்தி விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பான இறுதிக் […]

இலங்கை செய்தி

கைது பயத்தில் கோட்டா: நீதிமன்றத்துக்கு ஓட்டம்!

  • June 16, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகவே இந்த மனுவை கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, […]

உலகம் ஐரோப்பா

பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் ஹமாஸ் அமைப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் Palestine Action அமைப்புக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ” இது சியோனிச (இஸ்ரேலிய) குழுக்களின் அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஓர் அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவாகும்” என ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் அரங்கேற்றப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஒடுக்குவதும், அச்சுறுத்துவதுமே இந்த முடிவின் நோக்கமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

இலங்கை

மலையகத்தில் 100 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி!!

  • June 16, 2026
  • 0 Comments

கட்டுநாயக்காவில் இருந்த லிந்துல நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியான்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள கரோலினா எஸ்டேட் பகுதியில் இவ்விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது. காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக வட்டவல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலே password வழங்கினால் உளவுத்துறைக்கு ஆபத்தா?

  • June 16, 2026
  • 0 Comments

சுரேஷ் சலேவின் மடிக்கணினி மற்றும் தொலைபேசி என்பவற்றின் கடவுச் சொற்களை (பாஸ்வேட்) தற்போதைய சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசகரவுக்கு வழங்கவேக்கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுபெற்று, சுயாதீன ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அவரது தகவல்கள் இரகசியமாக பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சலேயின் மடிக்கணினி, தொலைபேசி என்பவற்றின் கடவுச் […]

உலகம் செய்தி

ஈரான் மத்திய வங்கி ஆளுநர் ரஷ்யா பயணம்!

  • June 16, 2026
  • 0 Comments

மத்திய வங்கி ஆளுநர் தலைமையிலான ஈரான் தூதுக்குழு, இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி மற்றும் வங்கி உறவுகளை மேம்படுத்த ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதும், இரு நாட்டு மத்திய வங்கிகளுக்கு இடையே புதிய பொருளாதார ஒத்துழைப்பு வழிமுறைகளை உருவாக்குவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை ஈரான் எதிர்கொண்டு வரும் சூழலில், அதன் முக்கிய நட்பு நாடான ரஷ்யாவுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது. அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் குறித்த […]

இலங்கை செய்தி

சீனாவின் ராணுவ ஒத்துழைப்பை பாராட்டுகிறது இலங்கை!

  • June 16, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, பாதுகாப்பு பிரதியமைச்சரும் சீன பாதுகாப்பு ஆலோசகரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை ஆயுதப்படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பை பாதுகாப்பு […]

செய்தி

சுரேஷ் சலே விவகாரம் : களமிறங்கும் மனித உரிமை ஆணைக்குழு!

  • June 16, 2026
  • 0 Comments

தடுப்பு காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் இன்று (16) வாக்குமூலங்கள் பெறப்படும் என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ தெரிவித்தார். சுரேஷ் சலே தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் ஒரு பொது அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த அறையில் முறையான காற்றோட்டம் இல்லாதது உட்பட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் […]