உலகம் முக்கிய செய்திகள்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஒருவர் உயிரிழப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில்  நேற்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், கிங்ஹாயின் (Qinghai ) ஹைக்ஸி (Haixi )மாகாணத்தில் உள்ள உயரமான பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்க மையத்திற்கு அருகில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இருந்ததாகவும் அந்த சுரங்கத்தில் பணிப்புரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு […]

இலங்கை

90 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்க அங்கீகாரம்!

  • June 16, 2026
  • 0 Comments

தித்வா புயலால் சேதமடைந்த  90 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க தேவையான நிதியை வழங்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், பேரிடரால் பாதிக்கப்பட்ட மதத் தலங்களை மீட்டெடுக்கும் தற்போதைய முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 758 பௌத்தக் கோயில்கள், 272 இந்து கோவில்கள், 199 மசூதிகள் மற்றும் 99 தேவாலயங்கள் உட்பட 1,328 மத ஸ்தலங்கள் தித்வா புயல் தாக்கத்தில் அழிந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் 178 மதத் தலங்களில் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பதில் G-7 நாடுகள் உறுதி

  • June 16, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது எரிசக்தி விலைகளைக் குறைக்க உதவும் என்று பிரித்தானிய பிரதமர் Keir Starmer நம்பிக்கை வெளியிட்டுள்ளார். G7 மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். ஹார்முஸ் நீரிணைமீள திறக்கப்படுவது பிரித்தானியாவுக்கு மிக முக்கியமானதும் என்று அவர் குறிப்பிடுகிறார். அமைதி ஒப்பந்தம் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டமை தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இதர தூதர்களுக்கு பிரித்தானிய பிரதமர், பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதில் G7 […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு-தொடரும் ராஜினாமா

  • June 16, 2026
  • 0 Comments

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா முடிவடைந்திருந்தாலும், தமிழக அரசியல் களம் இன்னும் பரபரப்பாகவே உள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நாள்தோறும் அரசியல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கையளித்தார். சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 2011 முதல் விராலிமலை தொகுதி […]

உலகம்

UAE இல் இருந்து முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்

  • June 16, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து 3500 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஈரான்-அமெரிக்க மோதலின் போது சமூக ஊடக விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்களின் சொத்துக்களும் உடைமைகளும், சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறைகளின்படி அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில்,  சொத்துப் பரிமாற்றம் அல்லது அது தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தான் […]

இலங்கை

விசாரணைக்கு உதவுங்கள் – சுரேஷ் சலேவிடம் அமைச்சர் கோரிக்கை

  • June 16, 2026
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய, முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி விசாரணைகளுக்கு உதவுவதே அவர் செய்ய வேண்டிய சரியான காரியம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்  நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “ஒரு முன்னாள் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரி என்ற முறையில், […]

ஐரோப்பா

போர்த்துகலில் கொலை குற்றவாளியான பொலிஸ் அதிகாரிக்கு தண்டனையில் இருந்து விலக்கு?

  • June 16, 2026
  • 0 Comments

போர்த்துக்கலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டபோதிலும், அவருக்கு சிறை தண்டனையில் இருந்து விலக்களிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஒன்றை கட்டுப்படுத்தும் பணியில் இருந்தபோது புருனோ பின்டோ ( Bruno Pinto) என்ற அதிகாரி  கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்த  மோனிஸ் என்பரை சுட்டுக் கொன்றமைக்காகவே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். வழக்கை விசாரணை செய்த   போர்த்துகீசிய நீதிமன்றம் குறித்த அதிகாரியை இரண்டாம் நிலைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது. அவருக்கு […]

உலகம்

“ஈரானுடனான ஒப்பந்தம் இஸ்ரேலை மேலும் பாதுகாப்பானதாக்கும்” – ஜே.டி. வான்ஸ் அறிவிப்பு

  • June 16, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தத்தில், வரும் நாட்களில் இஸ்ரேல் சேர்க்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த மூலோபாய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலுக்கு இருந்த ஆரம்பகட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விகளுக்கு வான்ஸ், நெருங்கிய நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது என்று கூறியுள்ளார். “இந்த ஒப்பந்தம் இஸ்ரேலையும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் […]

விளையாட்டு

மகத்தான மைல்கல்லை எட்டத் தயாராகும் மெஸ்ஸி

  • June 16, 2026
  • 0 Comments

கடந்த உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட பின்னர் அர்ஜென்டினா மற்றொரு வெற்றிக்குத் தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் ஜாம்பவாக் வீரரான லியோனல் மெஸ்ஸி மற்றொரு வரலாற்றுச் சாதனையை எதிர்நோக்கியுள்ளார். நாளை காலை அல்ஜீரியா அணியை எதிர்த்து விளையாடவுள்ள நிலையில், ​​மெஸ்ஸி தனது சர்வதேச வாழ்க்கையில் ஒரு மகத்தான மைல்கல்லை எட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அர்ஜென்டினா ஜெர்சியில் மெஸ்ஸி விளையாடும் 200வது போட்டியாகும். மெஸ்ஸியின் இந்த பயணம், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி, ஹங்கேரிக்கு […]

உலகம் செய்தி

“இஸ்ரேலின் உயிர்நாடி அமெரிக்காவின் கைகளுக்குள்”

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “நான் இல்லாவிட்டால் இங்கு இஸ்ரேல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இஸ்ரேலுக்காக நான் செய்த காரியங்களைச் செய்வதற்கு வேறு எந்தவொரு ஜனாதிபதியும் தயாராக இருந்திருக்கவில்லை” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனக்கு மிகச் சிறந்த நட்பு இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் […]