“இஸ்ரேலின் உயிர்நாடி அமெரிக்காவின் கைகளுக்குள்”
அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“நான் இல்லாவிட்டால் இங்கு இஸ்ரேல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஏனெனில் இஸ்ரேலுக்காக நான் செய்த காரியங்களைச் செய்வதற்கு வேறு எந்தவொரு ஜனாதிபதியும் தயாராக இருந்திருக்கவில்லை” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனக்கு மிகச் சிறந்த நட்பு இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை, லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும், அமெரிக்கா – ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் நீடிக்குமா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டது. “நிச்சயமாக நீடிக்கும்” என்று இதற்கு அவர் பதிலளித்துள்ளார்.





