90 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்க அங்கீகாரம்!
தித்வா புயலால் சேதமடைந்த 90 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க தேவையான நிதியை வழங்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், பேரிடரால் பாதிக்கப்பட்ட மதத் தலங்களை மீட்டெடுக்கும் தற்போதைய முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
758 பௌத்தக் கோயில்கள், 272 இந்து கோவில்கள், 199 மசூதிகள் மற்றும் 99 தேவாலயங்கள் உட்பட 1,328 மத ஸ்தலங்கள் தித்வா புயல் தாக்கத்தில் அழிந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இவற்றில் 178 மதத் தலங்களில் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




