இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு-தொடரும் ராஜினாமா

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா முடிவடைந்திருந்தாலும், தமிழக அரசியல் களம் இன்னும் பரபரப்பாகவே உள்ளது.

பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நாள்தோறும் அரசியல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கையளித்தார்.

சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

2011 முதல் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக தொடர்ந்து 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.விஜயபாஸ்கர்.

மேலும், 2013-ஆம் ஆண்டு முதல் 2021 வரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக அவர் பதவி வகித்தவர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின்னர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், முதல்வர் விஜய்க்கு ஆதரவாகவும் 25 அதிமுக எம்எல்ஏக்கள் வேலுமணி – சி.வி.சண்முகம் தலைமையில் அணி திரண்டனர்.

அந்த அணியில் முக்கியமானவராக சி.விஜயபாஸ்கர் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களின் கட்சி பொறுப்பினை பறித்த பழனிசாமி, புதிய நபர்களை உடனடியாக நியமித்தார்.

அப்போது சி.விஜயபாஸ்கரின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது.

ஒருகட்டத்தில் வேலுமணி அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பலரும் பழனிசாமியுடன் கைகோத்தனர். ஆனாலும், சி.விஜயபாஸ்கர் மட்டும் பழனிசாமியை நேரில் சந்திக்காமல் தவிர்த்தார்.

அதன்பின்னர் 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இந்தச் சூழலில், சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை இப்போது ராஜினாமா செய்துள்ளார். அவர் அடுத்ததாக தவெகவில் இணைவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி