ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய போர் கப்பல் துப்பாக்கிச்சூடு

  • June 16, 2026
  • 0 Comments

ரஷ்ய போர் கப்பல் ஒன்று ஆங்கிலக் கால்வாயில் பயணித்த படகொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோரோவிச் என்ற போர்க்கப்பல், வைட் தீவிலிருந்து சுமார் 20 கடல் மைல் தெற்கே எச்சரிக்கைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் படகில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச் சூடு இங்கிலாந்தின் கடல் எல்லைக்கு வெளியே நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பத்தை தொடர்ந்து ரோயல் படையின் HMS மெர்சி என்ற கப்பல் […]

உலகம்

ஜிம்பாப்வேயில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 09 பேர் பலி

  • June 16, 2026
  • 0 Comments

ஜிம்பாப்வேயில் ரயில் ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் குறைந்தது 09 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் கடவையில்  இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடப்பதற்கு முன்பு, ரயில் வருகிறதா என்பதை சரிபார்க்க தவறியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜிம்பாப்வேயில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன; சராசரியாக தினமும் ஐந்து பேர் உயிரிழக்கின்றனர் மற்றும் 38 பேர் […]

இலங்கை

திருமலையில் படகு பயணத் திட்டம்

  • June 16, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் பன்குளம் குளத்தில் யானைகளையும் பறவைகளையும் காணும் ஒரு நடவடிக்கையாக, படகுப் பயணத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொரவெவ மற்றும் கோமரங்கடவல பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷன் அக்மீமன,  கடந்த வருடத்திலிருந்து இத்திட்டத்தினை தொடங்குவதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம் என்றார். மேலும்  உரையாற்றிய அவர்,  “திருகோணமலை கடலோரப் […]

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வின்போது... இலங்கை செய்தி

பதற வைக்கும் செம்மணி புதைகுழி – இன்றும் எலும்புக் கூடுகள் அடையாளம்

  • June 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது. இதன்போது புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 366 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 06 மனித எலும்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய அகழ்ந்தெடுக்கப்பட்ட […]

இலங்கை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக என். சரவணபவன்

  • June 16, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் என்.சரவணபவன் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இன்று (16) இந்நியமனக் கடிதத்தினை அமைச்சர் டொக்டர் நளிந்த ஐயதிஸ்ஸ வழங்கி வைத்தார். வாழைச்சேனை தள வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த வேளை சிரேஷ்ட வகாரணமாகஸ நிர்வாகத்துறையில் ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக கடந்த 2026 06மாதம் 04 திகதி நேர்முகப் பரீட்சை இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் சுகாதார […]

ஐரோப்பா

ஸ்டாமர் பதவி விலகலை அறிவிக்க வேண்டும் – வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தல்

  • June 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பாரிய தோல்வியடைந்துள்ள நிலையில் பதவி விலகல் தொடர்பில் பிரதமர் ஸ்டாமர் அறிவிக்க வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting)  வலியுறுத்தியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் அவர் தனது இராஜினாமா தொடர்பான முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தொழிற்கட்சியில்  தலைமைப் போட்டி நடைபெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு […]

இலங்கை செய்தி

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக வியூகம் வகுக்கும் இலங்கை

  • June 16, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தடைகளை நீக்கி, இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை இணைத்து விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. இதன்கீழ் தெற்கு மற்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்தியாவில் டெலிகிராம் செயலி முடக்கம்

  • June 16, 2026
  • 0 Comments

டெலிகிராம் செய்தியிடல் செயலியை இந்திய அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. மருத்துவ நுழைவுத் பரீட்சையில் (நீட்) பங்கேற்கும் விண்ணப்பதாரர்களை ஏமாற்றுவதற்காக டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததை அடுத்து மத்திய அரசாங்கம் இன்று அந்த செயலியை முடக்கியுள்ளது. இதன்படி வரும் ஜுன் மாதம் 22 ஆம் திகதிவரை இந்த செயலி  தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் இடம்பெறவிருந்த பரீட்சை இரத்து செய்யப்பட்டது. இதனால் குறைந்தது 2.3 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

ஈரானின் அணு ஆயுத கனவு தகர்ப்பு

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி உடன்படிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் G7 உச்சி மாநாட்டில் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்காது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வரவிருக்கும் வெள்ளிக்கிழமை முதல் சுவிட்சர்லாந்தில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் […]

ஐரோப்பா செய்தி

புடினை விமர்சித்த ஓவியர் போலந்தில் சுட்டுக்கொலை

  • June 16, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல ரஷ்ய ஓவியர் ஒருவர், போலந்து நாட்டில் ‘மரணதண்டனை’ பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் போலந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். Semyon Skrepetsky என்ற புனைப்பெயரில் புகழ்பெற்ற 44 வயதுடைய Robert Kuzovkov என்ற ஓவியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெலாரஸ் எல்லையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலந்தின் Biała Podlaska நகரில் திங்கட்கிழமை காலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]