UAE இல் இருந்து முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்
ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து 3500 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஈரான்-அமெரிக்க மோதலின் போது சமூக ஊடக விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்களின் சொத்துக்களும் உடைமைகளும், சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறைகளின்படி அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், சொத்துப் பரிமாற்றம் அல்லது அது தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்கள், தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளின் சட்டங்களையும் விதிமுறைகளையும், குறிப்பாக இணையப் பயன்பாடு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் பொதுத் தொடர்பு தொடர்பான சட்டங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




