உலகம்

சீனாவின் தொடர்ச்சியான அத்துமீறல் – போர்கள பயிற்சிக்கு தயாராகும் தைவான்

  • June 21, 2026
  • 0 Comments

சீனாவின் அத்துமீறல்களை தொடர்ந்து தைவான் இராணுவம் போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வாரம் ஐந்து நாள் போர் தயார்நிலை பயிற்சியை நடத்தவுள்ளதாக  அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. தைபே அரசாங்கத்தின் எதிர்ப்புகளையும் மீறி, சீனா தனது சொந்தப் பிரதேசம் என்று உரிமை கோரும் பகுதியில் தொடர்ச்சியாக ஊடுருவி வருகின்ற நிலையில் போர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. “தயார்நிலை வரிசைப்படுத்தல் கட்டத்தின் போது, ​​அனைத்து நிலைகளிலும் உள்ள படைப்பிரிவுகளுக்குப் போர் நடைமுறைகள் மற்றும் போர்க்களச் சூழலுடன் […]

ஐரோப்பா

ஐ.நா அணுசக்தி ஆணையத்தின் தலைவர் சுவிட்சர்லாந்தில் – ஈரான் தொடர்பில் ஆய்வு

  • June 21, 2026
  • 0 Comments

ஈரானின் தற்போதைய கள நிலவரங்களை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஐ.நா அணுசக்தி முகமையின் தலைவர் இன்று சுவிட்சர்லாந்தின் மூத்த அரசியல் அதிகாரியை சந்தித்துள்ளார். ஐ.நா.வின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைமை தாங்கும் ரஃபேல் க்ரோசி (Rafael Grossi) , சுவிஸ் கூட்டாட்சி மன்றத்தின் துணைத் தலைவர் இக்னாசியோ காசிஸைச் சந்திதுள்ளார். அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனைக் கட்டுப்படுத்தும் பராக் ஒபாமாவின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடு இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்க, ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையை (IAEA) […]

இலங்கை

பாகிஸ்தானுக்கு முடியுமென்றால் நம்மால் முடியாதா? – சஜித் கேள்வி

  • June 21, 2026
  • 0 Comments

எண்ணெய் விலையைக் குறைப்பது நாட்டின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும். எனவே  எண்ணெய் விலைகளைக் குறைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கண்டிக்கு விஜயம் செய்த அவர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “உலகில் எண்ணெய் விலை குறைந்ததால் பாகிஸ்தானால் அதைச் செய்ய முடியுமென்றால், நம் நாட்டினால் ஏன் முடியாது? மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். இது அர்த்தமற்ற பேச்சுகளின் காலம். பொய்களை […]

ஐரோப்பா

பாரிஸில் போதைப் பொருள் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த ஓவியம்

  • June 21, 2026
  • 0 Comments

பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் பொலிஸார் நடத்திய சோதனையில் பாப்லோ பிக்காசோவின் ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. “போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த ஓவியம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பாரிஸின் கிழக்கே உள்ள சாம்பிக்னி-சுர்-மார்ன்  (hampigny-sur-Marne) என்ற நகரத்தில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நால்வர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிக்காசோவின் ஓவியம், கஞ்சா பிசின், ஆடம்பர ஆடைகள் மற்றும் பல ஆயிரம் யூரோ […]

Breaking News உலகம்

ஹமாஸின் இரு முக்கியஸ்தர்கள் உயிரிழப்பு – இஸ்ரேல் முழக்கம்

  • June 21, 2026
  • 0 Comments

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் இராணுவப் பிரிவுகளில் செயல்பட்ட இரு முக்கியஸ்தர்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பிற்கு அமைய  ஹுசைன் காத்ரா (Hussein Qadra) மற்றும் முகமது ஃபர்ரா (Mohammed ​Farra) ஆகியோரைத் தாங்கள் “ஒழித்துவிட்டதாக” இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் X பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஃபர்ராவுடன் இணைந்து இந்த வலையமைப்பை வழிநடத்திய காத்ரா, […]

உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்

  • June 21, 2026
  • 0 Comments

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றைய தினம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. கட்டுக்கடங்காத கிடங்குத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல நாட்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் தீயின் காரணமாக வெளியேறும் கரும்புகை சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் அனைவரும் மேற்படி புகையில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜூன் 17 அன்று மதியம், 46,400 சதுர மீட்டர் பரப்பளவுள்ள உறைந்த உணவுப் பொருட்கள் கிடங்கில் […]

ஐரோப்பா

பிரான்ஸுக்கு சிவப்பு எச்சரிக்கை – மது அருந்தவும் தடை

  • June 21, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை சாதனை அளவு உயர்ந்துள்ளதன் காரணமாக பிரான்ஸின் சில பகுதிகளில்  மதுபானத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் 96 மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களில் இன்று வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கிலிருந்து பாரிஸ் பகுதி வழியாக பர்கண்டி வரை வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் (102-104 ஃபாரன்ஹீட்) வரை இருக்கும் என்றும், சில பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்ட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு நேற்று […]

ஐரோப்பா

அரச குடும்பத்தின் வரி விவரங்கள் மக்கள் பார்வைக்கு

  • June 21, 2026
  • 0 Comments

மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிடுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்துள்ளது. அரச குடும்பத்தின் நிதிநிலைமைகள் பொதுமக்களின் தீவிர ஆய்வுக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் மன்னர்கள் சட்டப்படி சில வரிகளைச் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றிருந்தாலும், பல தசாப்தங்களாக அவர்கள் சில வரிகளைத் தாமாக முன்வந்து செலுத்தி வருகின்றனர். அதேநேரம் தங்கள் வரி விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. ஆனால், அவப்பெயர் பெற்ற முன்னாள் […]

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், இடதுசாரி கொள்கையுடைய தொழிற்கட்சியைப் பெருவாரியான இடங்களுடன் வரலாற்று வெற்றிக்கு கீர் ஸ்டார்மர் வழிநடத்தினார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பதவி விலகுகிறார் பிரிதமர் Keir Starmer ? நாளை விசேட அறிவிப்பு

  • June 21, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை நாளை (22) திங்கட்கிழமை ராஜினாமா செய்யவுள்ளார் என The Observer பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ஸ்டார்மரின் தலைமைப் பதவிக்கு எதிராக கடந்த சில மாதங்களாக எழுந்து வந்த அழுத்தங்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென அதிகரித்துள்ளது. சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. பிரதமரின் அரசியல் போட்டியாளரான Andy Burnham இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாக தெரிவாகியுள்ளார். இதன் மூலம் ஸ்டார்மரின் தலைமைப் பதவிக்கு […]

உலகம்

காசாவில் தொடர் தாக்குதல் – குழந்தை உள்பட 06 பேர் மரணம்

  • June 21, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்,  குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் அல் ஜசீரா ஒளிப்பதிவாளர் ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், அந்த ஒளிப்பதிவாளர் குறி பார்த்து சுடும் வீரராகப் பணியாற்றிய ஒரு பயங்கரவாதி என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன. இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக்டோபர் முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 1,007 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.