ஹமாஸின் இரு முக்கியஸ்தர்கள் உயிரிழப்பு – இஸ்ரேல் முழக்கம்
ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் இராணுவப் பிரிவுகளில் செயல்பட்ட இரு முக்கியஸ்தர்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பிற்கு அமைய ஹுசைன் காத்ரா (Hussein Qadra) மற்றும் முகமது ஃபர்ரா (Mohammed Farra) ஆகியோரைத் தாங்கள் “ஒழித்துவிட்டதாக” இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் X பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஃபர்ராவுடன் இணைந்து இந்த வலையமைப்பை வழிநடத்திய காத்ரா, அரை பில்லியன் ஷெக்கல்களுக்கும் (shekels) அதிகமான தொகையை ஹமாஸுக்கு மாற்றுவதற்கு உதவியதாக தெரிவித்துள்ளது.




