ஐரோப்பா

அரச குடும்பத்தின் வரி விவரங்கள் மக்கள் பார்வைக்கு

மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிடுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்துள்ளது.

அரச குடும்பத்தின் நிதிநிலைமைகள் பொதுமக்களின் தீவிர ஆய்வுக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் மன்னர்கள் சட்டப்படி சில வரிகளைச் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றிருந்தாலும், பல தசாப்தங்களாக அவர்கள் சில வரிகளைத் தாமாக முன்வந்து செலுத்தி வருகின்றனர்.

அதேநேரம் தங்கள் வரி விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இல்லை.

ஆனால், அவப்பெயர் பெற்ற முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவைச் சுற்றியுள்ள சமீபத்திய சர்ச்சைகள், அரச குடும்பத்தின் நிதிநிலைமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

இதற்கமைய தனது தனிப்பட்ட வரித் தகவல்களைப் பகிரும் முதல் மன்னராக சார்லஸ் திகழ்வார் என பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்