ஐரோப்பா

கீவின் தொடர் தாக்குதல் – கிரிமியா தீபகற்பத்தில்  பெட்ரோல் விற்பனை இடைநிறுத்தம்

  • June 22, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள  கிரிமியா தீபகற்பத்தில்  பெட்ரோல் விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9:00 மணி முதல், கிரிமியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் தனிநபர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கான ரொக்கம், ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் பற்றுச்சீட்டுகள் மூலமான எரிபொருள் விற்பனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. “கிரிமியா குடியரசின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விற்கப்படும்,” என்று அப்பகுதியின் தலைவர் செர்ஜி அக்சியோனோவ் (Sergey Aksyonov) தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குடியிருப்பாளர்களை […]

ஐரோப்பா

இங்கிலாந்தை தாக்கும் வெப்ப அலை – அடுத்த 02 மாதங்கள் கடுமையானவை

  • June 22, 2026
  • 0 Comments

இங்கிலாந்தை தாக்கவுள்ள வெப்ப அலை குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வெப்ப அலையை முன்னெப்போதும் இல்லாதது என எச்சரிக்கை விடுத்துள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கடினமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேல்மட்டக் காற்று கீழே இறங்கி அழுத்தப்படுவதால் இந்த வெப்ப அலை உருவாகுவதாகவும் ரோயல் வானிலை ஆய்வு சங்கத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் லிஸ் பென்ட்லி ( Liz Bentley ) தெரிவித்துள்ளார். புதைபடிவ எரிபொருள் வெளியேற்றத்தால் நமது காலநிலை மாறி வருவதாகவும், இந்த […]

கைப்பற்றப்பட்ட கோகோயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 816 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் நிலத்தடி பன்கரில் 2.7 டன் கோகோயின் பறிமுதல்

  • June 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள நிலத்தடி பன்கர் அமைப்பிலிருந்து (Underground bunker) அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக 2.7 டன் கோகோயின் cocaine போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கோகோயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 816 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் சோதனையின் போது பொலிஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற 21 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வணிக […]

பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரவை மற்றும் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரதமர் இன்று தீர்க்கமான முடிவு: லேபர் கட்சி தலைவராகிறார் Andy Burnham

  • June 22, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரவை மற்றும் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற Makerfield இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் (Labour Party) வேட்பாளரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அமோக வெற்றி பெற்றார். Reform UK கட்சியின் சவாலை முறியடித்து, தொழிற்கட்சியின் வாக்கு வங்கியை அவர் பலப்படுத்தியுள்ளார். […]

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஈரான் குழுவுக்கு அந்நாட்டு சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf தலைமை வகித்தார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

முதற்சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்தியஸ்த்த நாடுகள் அறிவிப்பு

  • June 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை, நேர்மறையான மற்றும் முன்னேற்றத்துடன் நிறைவடைந்துள்ளதாக மத்தியஸ்தர்களான கத்தார், பாகிஸ்தான் ஆகியன தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் தொடங்கியது. இந்நிலையில் இது தொடர்பில் கத்தார் மற்றும் பாகிஸ்தான் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இரு நாடுகளின் உயர்நிலைக் குழு, அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வழிகாட்டி வரைபடத்திற்கு (Roadmap) ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மூடப்படும் ரயில் பாதை – பயணிகளின் கவனத்திற்கு

  • June 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் (Bedford ) பகுதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து அப்பகுதியூடான இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அந்த பாதை புனரமைப்பு பணிகளுக்காக வரும் 28 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பெட்ஃபோர்டுக்கும் (Bedford ) லண்டன் செயின்ட் பான்கிராஸுக்கும் (London St Pancras) இடையிலான ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூடல் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த ரயில் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்ததுடன், மேலும் […]

இலங்கை

இலங்கையில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு

  • June 21, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று அதிகபட்சமாக 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பொன்னறுவை மாவட்டத்திலேயே இந்த உச்சபட்ச வெப்பநலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவுப் பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 35 .8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

பெண்களுக்கு வலைவீச்சு : சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

  • June 21, 2026
  • 0 Comments

சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மோசடி  சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிதி மோசடி, பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நாடு முழுவதும் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சில சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போதைப்பொருள் அல்லது மயக்கமருந்து கலந்த பானங்களை வழங்கி, அவர்கள் நினைவிழந்த பின்னர் துஷ்பிரயோகம் அல்லது திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்னும் சிலர் பெண்களின் […]

உலகம்

யுரேனியத்தைச் செறிவூட்டுவது எங்கள் உரிமை, அதை அமெரிக்கா ஏற்க வேண்டும்

  • June 21, 2026
  • 0 Comments

யுரேனியத்தைச் செறிவூட்டும் எங்கள் உரிமையை அமெரிக்கா ஏற்க வேண்டும் என ஈரான் அதிபர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தனது நாடு யுரேனியத்தைச் செறிவூட்டும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian), “வன்முறை, அடக்குமுறை மற்றும் அவமானத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். “செறிவூட்டும் உரிமையையும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதை அவர்கள் [அமெரிக்கா] ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என உறுதிப்பட […]

இலங்கை முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

  • June 21, 2026
  • 0 Comments

2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கவிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கல்வி அமைச்சகம் தற்போது பதிலளித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பரீட்சைக்கு தயாராவதற்கு நேரம் இருப்பதால், பரீட்சை கால அட்டவணையைத் திருத்தி அமைக்கத் தேவையில்லை என்று  தெரிவித்துள்ளது. பாடத்திட்டத்தை முடிக்க 300 நாட்கள் தேவைப்படுவதாகவும் இதற்காக ஆகஸ்ட் 07 ஆம திகதிவரை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.