பிரான்ஸுக்கு சிவப்பு எச்சரிக்கை – மது அருந்தவும் தடை
ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை சாதனை அளவு உயர்ந்துள்ளதன் காரணமாக பிரான்ஸின் சில பகுதிகளில் மதுபானத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் 96 மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களில் இன்று வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கிலிருந்து பாரிஸ் பகுதி வழியாக பர்கண்டி வரை வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் (102-104 ஃபாரன்ஹீட்) வரை இருக்கும் என்றும், சில பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்ட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு நேற்று அவசர கூட்டமொன்றை நடத்தினார்.
இதில் வருடாந்திர ஃபெட் டி லா இசை நிகழ்ச்சிகள் ( Fete de la Musique festivals) மற்றும் பிற பொது நிகழ்வுகளில் மது அருந்துவதற்கு தடை விதித்துள்ளார்.
இருப்பினும், பாரிஸ் அதிகாரிகள் பூங்காக்களை 24 மணி நேரமும் திறந்திருக்குமாறு உத்தரவிட்டனர்.




