இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள 47,179 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையில் 24 மணிநேரத்துக்குள் 1,069 பேருக்கு டெங்கு

  • June 22, 2026
  • 0 Comments

இலங்கையில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்துக்குள் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள 47,179 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். வழக்கமாக ஒரு நாளில் பதிவாகும் எண்ணிக்கையை விட, தற்போது தினசரி தொற்று விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. […]

ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கை மற்றும் 41 வயதிலும் அவரிடம் இருக்கும் விளையாடும் ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். செய்தி விளையாட்டு

ரொனால்டோவின் ஆட்டம் குறித்து கடும் அதிருப்தி

  • June 22, 2026
  • 0 Comments

போர்ச்சுகல் கால்பந்து அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தற்போதைய ஆட்டம் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. உலகக் கோப்பையில் காங்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது குறைந்த வேகம் மற்றும் செயல்திறன் குறித்து நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனினும், ரொனால்டோவுக்கு மட்டுமே பந்து பாஸ் செய்ய வேண்டும் என்ற எந்தவொரு அழுத்தமும் வீரர்களுக்கு இல்லை என்று போர்ச்சுகல் அணியின் Francisco Conceicao திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காங்கோ குடியரசுக்கு (DR Congo) எதிரான ஆட்டம் 1-1 […]

ஐரோப்பா

ஜெர்மனியில் MPகளின் சம்பளத்தின் பெறும்பகுதியை சமூக நிதிகளுக்கு வழங்க முன்மொழிவு

  • June 22, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தின் பெறும்பகுதியை சமூக நிதிகளுக்கு நன்கொடையாக வழங்கக் கட்டாயப்படுத்தும் சட்டத்திருத்தம்மொன்றில் வாக்கவுள்ளதாக தகவல் வௌயாகியுள்ளது. சோசலிச இடதுசாரிக் கட்சி, இந்த வாக்கெடுப்பை முன்மொழிந்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சராசரி பொது சேவை சம்பளத்திற்கு இணையாகக் கணக்கிடப்பட்ட ஊதியத்தை மட்டுமே தக்கவைத்துக்கொள்வார்கள். கோடைக்காலத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி அமர்வின்போது இது தொடர்பான  வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதத்திற்கு சுமார் €11,833.47 யூரோவை ஊதியமாக பெறுகிறார். அத்துடன் […]

Egypt's Mohamed celebrates scoring his team's second goal during the FIFA World Cup 2026 Group G match against New Zealand at BC Place, Vancouver, on June 21, 2026 செய்தி விளையாட்டு

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது எகிப்து

  • June 22, 2026
  • 0 Comments

வான்கூவரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் நியூசிலாந்து முன்னிலை பெற்றிருந்தாலும், இரண்டாம் பாதியில் நட்சத்திர வீரர் முகமது சாலா ஒரு கோல் மற்றும் ஒரு அசிஸ்ட் செய்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் குழு ‘ஜி’ (Group G) பிரிவில் எகிப்து முதலிடத்தைப் […]

A second bird to test postive to the H5 strain of avian flu came from near where the virus was found in the first detected case. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தீவிரம் – பண்ணைகள் lockdown

  • June 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் தனது பண்ணைகளை அவசரகால முடக்க நிலைக்கு (lockdown) கொண்டு சென்றுள்ள நிலையில், இரண்டாவது பறவை ஒன்றிற்கும் அதிதீவிரப் பறவைக் காய்ச்சல் H5N1 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில், முதன்முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்ட brown skua பறவைக்கு அருகிலேயே, தற்போது northern giant petrel என்ற பறவையிலும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பறவைகள் மத்தியில் பெருமளவிலான மரணங்கள் ஏற்பட்டதற்கான […]

ஐரோப்பா

எடின்பரோவில்  இனவெறி தாக்குதல் – சந்தேகநபர் பொலிஸாரின் பிடியில்

  • June 22, 2026
  • 0 Comments

இங்கிலாந்து – எடின்பரோவில்  கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு எடின்பர்க்கில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் தாக்குதல்களை ஆரம்பித்த  நபர் பின்னர் நகரின் பிற பகுதிகளிலும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தாக்குதல்களில் சுமார் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. இந்நிலையில்  “அச்சுறுத்தல்கள், கொள்ளை மற்றும் நாசவேலைகள் உள்ளிட்ட வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு […]

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்திய ஏற்றுமதியில் சுமார் 93 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதோடு, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்கள் மலிவாகக் கிடைக்கும். இந்தியா ஐரோப்பா செய்தி

இந்தியா – ஐரோப்பா வர்த்தக ஒப்பந்தம் டிசம்பருக்குள் கைச்சாத்து

  • June 22, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் 2027 பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றும் எனவும் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்திய ஏற்றுமதியில் சுமார் 93 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதோடு, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்கள் மலிவாகக் […]

உலகம்

எதியோப்பியாவின் சட்டமன்ற தேர்தல் – ஆளும் கட்சி அமோக வெற்றி

  • June 22, 2026
  • 0 Comments

எதியோப்பியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் செழிப்புக் கட்சி (Prosperity Party ) மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தன. முடிவுகளின் படி ஆளும் கட்சியான செழிப்புக் கட்சி (Prosperity Party )  பிரதிநிதிகள் சபையில் உள்ள 486 இடங்களில் 438 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. இந்த தேர்தலில் 40 இற்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்ட போதிலும் ஆளும் கட்சி 64 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றது. மேலும் […]

இன்று தனது 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு இன்று பிறந்தநாள்: தவெகவினர் கொண்டாட்டம்

  • June 22, 2026
  • 0 Comments

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று (22) கொண்டாடுகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட தவெக தொண்டர்கள் திட்டமிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு சமூக வலைதள பதிவு மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன்” என அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். […]

மத்திய கிழக்கு மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு இடையே நாற்கரப் பேச்சுவார்த்தை லூசெர்ன் ஏரி உச்சிமாநாட்டில் தொடங்கியது. இதன் தொடக்கத்தில், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மானின் கரங்களைப் பிடித்தபடி பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உரையாற்றுவதையும், அருகில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இருப்பதையும் படத்தில் காணலாம். உலகம் செய்தி வணிகம்

சுவிட்சர்லாந்து சந்திப்பு: எண்ணெய் விலை மேலும் சரிவு!

  • June 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று (22) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதிக்கான தடைகளில் இருந்து விலக்கு (Waivers) பெற்றுள்ளதாக ஈரான் அறிவித்ததை அடுத்து, உலக சந்தையில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் தணிந்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) பேரல் ஒன்றுக்கு 1.53 டாலர்கள் (1.90%) சரிந்து 79.04 டாலர்களாக […]