ஐரோப்பா

இங்கிலாந்தை தாக்கும் வெப்ப அலை – அடுத்த 02 மாதங்கள் கடுமையானவை

இங்கிலாந்தை தாக்கவுள்ள வெப்ப அலை குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வெப்ப அலையை முன்னெப்போதும் இல்லாதது என எச்சரிக்கை விடுத்துள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கடினமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேல்மட்டக் காற்று கீழே இறங்கி அழுத்தப்படுவதால் இந்த வெப்ப அலை உருவாகுவதாகவும் ரோயல் வானிலை ஆய்வு சங்கத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் லிஸ் பென்ட்லி ( Liz Bentley ) தெரிவித்துள்ளார்.

புதைபடிவ எரிபொருள் வெளியேற்றத்தால் நமது காலநிலை மாறி வருவதாகவும், இந்த கடினமான வெப்பநிலை உயரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் பொது சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பரவலான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானியான டாக்டர் குளோ பிரிமிகோம்ப், இந்த வெப்ப அலை “மிகவும் கவலை அளிக்கிறது” என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்