இந்தியா இலங்கை செய்தி

ரில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி. குழு டெல்லி பயணம்

ரில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி. குழு டெல்லி பயணம்

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, பாரதீய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் இன்று டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறது.

இன்று முதல் ஓக்டோபர் 1 ஆம் திகதி வரை ஜேவிபி குழுவினர் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

பாஜக-ஜேவிபி உறவுகளை வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள வழிவகுப்பது மற்றும் இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம், என்று பாஜகவின், வெளியுறவு பொறுப்பாளர் விஜய் சௌதைவாலே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரில்வின் சில்வா தலைமையிலான, ஜேவிபி குழுவில் சந்திரிகா அதிகாரி (மத்திய குழு உறுப்பினர்), அபுபக்கர் ஆதம்பாவா (நாடாளுமன்ற உறுப்பினர்), கபிலன் சுந்தரமூர்த்தி (மாவட்டக் குழு உறுப்பினர்) மற்றும் கல்பனா மதுபாஷினி (சர்வதேச விவகார உறுப்பினர்) ஆகியோரும் அடங்குகின்றனர்.

இந்தக் குழு, பாஜக தலைவர் நிதின் நபின், பொதுச் செயலாளர் பி. எல். சந்தோஷ் மற்றும் ஏனைய மூத்த பாஜக தலைவர்களைச் சந்திக்க உள்ளது.

அத்துடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோருடனும், ஜேவிபி குழுவினர் கலந்துரையாடல்கள் நடத்தவுள்ளனர்.

பாஜக தலைமையகத்தில் உள்ள பல்வேறு பாஜக அணிகள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ள ஜேவிபி குழுவினர், நாடாளுமன்றம் மற்றும் டெல்லி பாஜக மாநில அலுவலகத்திற்கும் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை