ஐரோப்பா

பிரான்ஸில் திருப்பலி நிகழ்வை திறந்தவெளியில் நடத்தும் பாப்பரசர் – அலைமோதும் மக்கள் கூட்டம்

பிரான்ஸில் திறந்தவெளியில் நடைபெறும் திருப்பலி நிகழ்வில் பங்கேற்க சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றையதினம் பாரிஸ் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக புகழ்பெற்ற ‘அவென்யூ டெஸ் சாம்ப்ஸ்-எலிசீஸ்’ (Avenue des Champs-Élysées) வீதியில் மக்கள் நிரம்பியதாக கூறப்படுகிறது.

இதேவேளை இந்நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திருத்தந்தை வலம் வருவதற்கு அருகில் உள்ள சாலைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சில் நான்கு நாட்கள் மற்றும் மூன்று நகரங்களை உள்ளடக்கிய ஒரு தீவிரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அங்கு பாலியல் துஷ்பிரயோக விவகாரங்கள் நாடு தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருச்சபையின் நற்பெயரை மீட்டெடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்