உலகம்

அமெரிக்காவின் இரு மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம்

நோர்’ஈஸ்டர் (Nor’easter) புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த ‘நோ’ஈஸ்டர்’ (Nor’easter) புயல் தற்போது அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால், கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மின்வெட்டு, போக்குவரத்து இடையூறு மற்றும் பல்வேறு வெளிப்புற நிகழ்வுகள் ரத்து செய்யப்படுதல் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நியூயார்க் மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான கடலோர வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் கனமழை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் விளைவாக, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், வர்ஜீனியா முதல் மெய்ன் வரையிலான பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அத்துடன் 1,199 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 2,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்