உலகம்

குடியேற்றம், இனம் மற்றும் கல்வி தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க ட்ரம்ப் முட்டுக்கட்டை

குடியேற்றம், இனம் மற்றும் கல்வி தொடர்பான செலவினங்களுக்காக அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) ஒப்புதல் அளித்திருந்த 800 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை ஒருதலைப் பட்சமாக ஒதுக்கி வைக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில், இது ஒரு புதிய கட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இது தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்கக் குடிமக்களுக்குப் பயனளிக்காத, வீணான மற்றும் தீங்கு விளைவிக்கும் அரசுச் செலவினங்களைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் பயன்படுத்த ட்ரம்ப் உறுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் உதவி, இன சிறுபான்மையினர் வணிக மேம்பாடு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சில திட்டங்கள் உட்பட பல திட்டங்களை அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம், நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை காங்கிரசுக்கு வழங்குகிறது, ஆனால் அந்தத் திட்டங்கள் சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரிப்பதாகவும், இனப் பதட்டங்களைத் தூண்டுவதாகவும், சுற்றுச்சூழல் குறித்த பீதியை ஏற்படுத்தும் அணுகுமுறைகளை ஊக்குவிப்பதாகவும் வெள்ளை மாளிகை குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்