ஐரோப்பா

பிரான்ஸில் ரோந்து சென்ற இரு அதிகாரிகள் மீது கத்திகுத்து தாக்குதல்

பிரான்ஸில் இரண்டு மாநகராட்சி காவல்துறையினர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வில்சன் மாவட்டத்தில் உள்ள ரூ டி’ஆஸ்டர்லிட்ஸ் (d’Austerlitz) தெருவில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு அதிகாரிகளும் ரோந்து சென்றுக்கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர் தாக்குதலை நடத்தியுள்ளார்.

சந்தேக நபர் மூன்று கத்திகளை வைத்திருந்ததாக பிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர், அதிகாரிகளை நோக்கி சைகை காட்டிய பின்னர் அவர்களை அணுகி, கத்தியுடன் அவர்கள் மீது பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் பாரிய போராட்டத்தின்பின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்