ஐரோப்பா

இங்கிலாந்தில் தெரியும் சூரியக் கிரகணம் – வெற்றுக் கண்ணால் பார்க்க வேண்டாம்

  • August 12, 2026
  • 0 Comments

இங்கிலாந்தும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழும் மிகப்பெரிய முழு சூரிய கிரகணம் இதுவாகும். மேலும் இதுபோன்ற ஒரு கிரகணம் மீள எப்போது நிகழும் என்பதையும் கணிக்க முடியாது. இந்நிலையில் இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்புப் பாதுகாப்புக் கண்ணாடிகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டதாகவும், லண்டனின் சில இடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் […]

வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் தொடரும் இழுபறி

  • August 12, 2026
  • 0 Comments

வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்தோ, அதை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தோ பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை பிராந்தியத்தில் கப்பல்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்திய நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற […]

உலகம்

இரண்டாவது நாளாகவும் வான்வெளியை மூடியது சிசிலி – விமான சேவைகள் பாதிப்பு

  • August 12, 2026
  • 0 Comments

சிசிலியின் எட்னா எரிமலையிலிருந்து புதிதாக வெளியேறிய சாம்பல் காரணமாக, வான்வெளி கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சிசிலியின் கட்டானியா விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து “பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை அந்தந்த விமான நிறுவனங்களிடம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமீபத்திய எரிமலை வெடிப்பின் தாக்கம் சிசிலிக்கு அப்பாலும் உணரப்பட்டுள்ளது. எரிமலைச் சாம்பல் மத்தியதரைக் கடலைக் கடந்து தெற்கே நகர்ந்ததால், அண்டை நாடான மால்டாவில் இரவு முழுவதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், குறிப்பிடத்தக்க தாமதங்கள் […]

ஐரோப்பா

துருக்கியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ விமானம் விபத்து

  • August 12, 2026
  • 0 Comments

துருக்கியின் வடமேற்கு மாகாணமான யலோவாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்த  F-16 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது விமானி வெளியே குதித்தமையால் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.    

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி ஆராய்வு

  • August 12, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன. இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு […]

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார். இலங்கை செய்தி

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துங்கள்: கடற்படை தளபதியிடம் ஆளுநர் கோரிக்கை

  • August 12, 2026
  • 0 Comments

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியபோதே ஆளுநர் இந்த விடயங்களை […]

ரஷ்யாவின் வர்த்தகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷ்யாவும் அதே வழியில் பதிலடி (tit-for-tat response) கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை எச்சரித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யக் கப்பல்கள் பறிமுதல்: ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை

  • August 12, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வர்த்தகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷ்யாவும் அதே வழியில் பதிலடி (tit-for-tat response) கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் நிழற்படை (shadow fleet) கப்பல்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வரும் நிலையிலேயே, புடின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மீது தடைகளை விரிவாக்கியுள்ளதுடன், சில கப்பல்களையும் அவற்றின் ஊழியர்களையும் சோதனைக்காகத் தடுத்து நிறுத்தியுள்ளது. தடைகளை […]

ஹங்கேரி நாட்டின் புதிய ஜனாதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான ஆண்ட்ராஸ் பாகா (Andras Baka) செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா செய்தி

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்தது ஹங்கேரி நாடாளுமன்றம்

  • August 12, 2026
  • 0 Comments

ஹங்கேரி நாட்டின் புதிய ஜனாதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான ஆண்ட்ராஸ் பாகா (Andras Baka) செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் விக்டர் ஆர்பனின் (Viktor Orban) அதிகார மையங்களை அகற்றுவதற்காகத் தற்போதைய பிரதமர் பீட்டர் கெய்ர் (Peter Magyar) எடுத்து வரும் முயற்சிகளில் இது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் மத்திய-வலதுசாரி ‘திசா’ (Tisza) கட்சியின் ஆதரவுடன், பெரும்பாலும் சடங்குப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட இந்த ஜனாதிபதி பதவிக்கு பாகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேவேளை, எதிர்க்கட்சியான […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் செல்வந்தப் பகுதிகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கவைக்க பரிசீலனை

  • August 12, 2026
  • 0 Comments

ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் கிராமத்திற்கு அருகில் 1,200 புலம்பெயர்ந்தோரை குடியமர்த்தும் திட்டங்களை பிரதமர் ஆண்டி பர்னம் முன்வைத்துள்ள நிலையில், அதனை ஆதரித்து தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் புகலிடம் கோருவோரைப் பகிர்ந்தளிப்பதற்கு ஒரு ‘நியாயமான மற்றும் சமமான அமைப்பு’ இருக்க வேண்டும் என்று அன்னா டர்லி (Anna Turley) இன்று தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர்ந்தோருக்கு வீடுகளை வழங்குவதில் செல்வந்தப் பகுதிகள் ‘தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்’ என்ற ஆண்டி பர்னமின் வலியுறுத்தலையும் அவர் சுட்டிக்காட்டினார். […]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

10 லட்சம் ஆதரவாளர்களை திரட்ட தயாராகிறது எதிரணி: NPP அரசுக்கு எதிராக வியூகம்

  • August 12, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனவே, நாட்டு மக்களுக்கு […]