ஐரோப்பா

பிரித்தானியாவில் செல்வந்தப் பகுதிகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கவைக்க பரிசீலனை

ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் கிராமத்திற்கு அருகில் 1,200 புலம்பெயர்ந்தோரை குடியமர்த்தும் திட்டங்களை பிரதமர் ஆண்டி பர்னம் முன்வைத்துள்ள நிலையில், அதனை ஆதரித்து தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் புகலிடம் கோருவோரைப் பகிர்ந்தளிப்பதற்கு ஒரு ‘நியாயமான மற்றும் சமமான அமைப்பு’ இருக்க வேண்டும் என்று அன்னா டர்லி (Anna Turley) இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், புலம்பெயர்ந்தோருக்கு வீடுகளை வழங்குவதில் செல்வந்தப் பகுதிகள் ‘தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்’ என்ற ஆண்டி பர்னமின் வலியுறுத்தலையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிடிங்டனுக்கு (Piddington) அருகில் புலம்பெயர்ந்தோர் முகாம் அமைப்பது குறித்த விவாதிக்கப்பட்டபோது பிரதமர் இந்த கூற்றை தெரிவித்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரின் பைசெஸ்டரில் உள்ள ஒரு முன்னாள் இராணுவத் தளத்தில்  1,250 ஆண் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க பரிசீலிக்கப்பட்டது.

இதற்கு ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டதுடன், அவர்களை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு ஆதரவாக அடையாளப் பொது வாக்கெடுப்பை நடத்த வாக்களித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே பிரதமர் புகலிடக் கோரிக்கையாளர்களை பாகுப்பாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பில் அறிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்