ஐரோப்பா

இங்கிலாந்தில் தெரியும் சூரியக் கிரகணம் – வெற்றுக் கண்ணால் பார்க்க வேண்டாம்

இங்கிலாந்தும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழும் மிகப்பெரிய முழு சூரிய கிரகணம் இதுவாகும். மேலும் இதுபோன்ற ஒரு கிரகணம் மீள எப்போது நிகழும் என்பதையும் கணிக்க முடியாது.

இந்நிலையில் இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்புப் பாதுகாப்புக் கண்ணாடிகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டதாகவும், லண்டனின் சில இடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் கண்ணாடிகளை பெற காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக செயின்ட் ஐவ்ஸில் (St Ives), கண்ணாடிகளை பெறுவதற்கான வரிசை 200மீட்டர் நீளத்திற்கு நீண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் சவுத்தாம்ப்டன் மற்றும் பர்மிங்காம் போன்ற தொலைதூர பகுதிகளுக்கு பயணித்து இந்த கண்ணாடிகளை வாங்கியுள்ளனர்.

சூரியக் கண்ணாடிகள் இல்லாதவர்கள் நேரடியாக சூரியனைப் பார்க்க வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக ஊசித் துளை கேமராக்களை உருவாக்கலாம் அல்லது வடிகலன்களைப் பயன்படுத்தி இந்த நிகழ்வைக் காணலாம் என்றும் நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்