அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு நிகரான வரி விதிப்பு – கனடா அறிவிப்பு
கனடாவின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளமைக்கு பதிலடியாக வொஷிங்டனுக்கு எதிரான வர்த்தக வரிகளை ஒட்டாவா இன்று அறிவித்துள்ளது.
வொஷிங்டன் விதித்துள்ள அதே மதிப்பிலான புதிய வரிகளுக்கு ஈடாக கனடாவும் வரி விதித்துள்ளது.
இதற்கமைய வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல், அமெரிக்க எஃகு மற்றும் அலுமினியத்தின் மீதான வரியை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கவும், C$27.6 பில்லியனுக்கும் (US$19.94 பில்லியன்) அதிகமான மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்கவும் கனடா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் François-Philippe , ட்ரம்பின் வரி விதிப்புத் திட்டத்திற்கு எதிராக, “அதே மதிப்பிலான, இலக்கு வைக்கப்பட்ட மற்றும் உத்திசார்ந்த” இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
தொடர்புடைய செய்தி
கனடா மீது கூடுதல் வரி – பதில் நடவடிக்கையை அறிவிக்கும் ஒட்டாவா




