இந்தியா

மோடியின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் – ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது

  • July 21, 2026
  • 0 Comments

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவுப் பிரச்சினைக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து, இந்தியப் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இன்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்கவும், அந்த பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தவும், பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய   எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் விடுமுறையை கழிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் – 60 பேர் மருத்துவமனையில்

  • July 21, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் (Costa del Sol) பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்த 60 பேர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த ஹோட்டலில், நீச்சல் குளத்தில் நீந்திய பிறகே குறைந்தது 60 பேர் சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் சிலர் கோஸ்டா டெல் சோல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மற்றவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. குளோரின் மற்றும் அமிலத்தைச் செலுத்தும் அழுத்தக் […]

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கையளிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது: “கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயன்றன. […]

ஐரோப்பா

ஏலத்திற்கு வரும் டைட்டானிக் கப்பலில் பயணித்த பயணி ஒருவர் எழுதியக் கடிதம்

  • July 21, 2026
  • 0 Comments

டைட்டானிக் கப்பலில் இரண்டாம் வகுப்புப் பயணியாக இருந்த ஹென்றி பிரைஸ் ஹோட்ஜஸ் (Henry Price Hodges) எழுதிய கடிதம் ஒன்று, ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. வில்ட்ஷயரில் (Wiltshire) இந்த கடிதம் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், சுமார் 35000 பவுண்ட்ஸ் வரை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1912 ஏப்ரல் 10 அன்று குயின்ஸ்டவுன் அஞ்சல் முத்திரையுடன் திகதியிடப்பட்ட இந்த கடிதம் நண்பர் ஒருவருக்கு  எழுதப்பட்டிருந்ததுடன், கப்பலில் நிலவிய நல்ல வானிலை மற்றும் இனிமையான சூழலை விவரித்திருந்தது. சவுத்தாம்ப்டனில் […]

" போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் போர் ஏற்படாது: ஐரோப்பிய தூதுக்குழுவிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

  • July 21, 2026
  • 0 Comments

” போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

உலகம்

ஐரோப்பா நோக்கிய ஆபத்தான பயணங்கள் அதிகரிப்பு -144 அகதிகள் மாயமானதாக அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் தீவுகளுக்குச் செல்லும் பாதையில், மௌரித்தானியாவின் (Mauritania)  கடற்கரைக்கு அப்பால் தொடர்ச்சியாக கப்பல்கள் அல்லது படகுகள் விபத்துக்குள்ளாகுவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 144 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை (UNHCR), ஜூலை 14 முதல் 18 வரையான காலப்பகுதியில் இந்த விபத்துகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த காலப்பகுதியில் மூன்று மீட்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் ஊடாக 387 பேர் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழ். மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வு

  • July 21, 2026
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய நீர்வாழ் உயிரின […]

எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை செய்தி

மோதல் வெடிப்பதற்குள் முடிவு கட்டுங்கள்: யாழ்.மீனவர்களிடமிருந்து முதல்வர் விஜய்க்கு பறந்த செய்தி

  • July 21, 2026
  • 0 Comments

எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா மேலும் குறிப்பிடுகையில், “சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள், குறிப்பாகப் புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த தமிழக மீனவர்கள், எமது […]

உலகம்

பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் மீது ஈரான் புதிய தாக்குதல்

  • July 21, 2026
  • 0 Comments

பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் மீது ஈரான் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. தெற்கு ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிறது. மேலும், தாக்கப்பட்ட கப்பல்களில் இரண்டு, ஹோர்முஸ் ஜலசந்தியில் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதித்ததால், வளைகுடாப் பகுதியில் ஒரு புதிய போர்முனை உருவாகியுள்ளது.

இலங்கை

வல்வெட்டித்துறையில் குட்டிமணி , தங்கதுரைக்கு சிலை – நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள பொலிஸார்

  • July 21, 2026
  • 0 Comments

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையான நிலையில் , அவரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை […]