இலங்கை

வல்வெட்டித்துறையில் குட்டிமணி , தங்கதுரைக்கு சிலை – நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள பொலிஸார்

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையான நிலையில் , அவரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை , குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் , ஜூலை 25மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்