முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கில் விரைவில் காணி விடுவிப்பு: பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி

  • July 31, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் […]

இலங்கை இராணுவத்தின் 26-வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் புதிய ராணுவ தளபதி நியமனம்

  • July 31, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்தின் 26-வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 25-வது தளபதியாக பணியாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னர், நிலந்த பிரேமரத்ன இவ்வருடம் ஜூன் மாதம் முதல் இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) பணியாற்றி வந்தார். இலங்கை பீரங்கிப் படையணியின் (Sri Lanka Artillery) மூத்த அதிகாரியான இவர், […]

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிவிளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

சீனா, ரஷ்ய ஜனாதிபதிகள் இந்தியா வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

  • July 31, 2026
  • 0 Comments

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிவிளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த உயர்மட்ட வருகைகள் தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த திங்கள் ( 27) மற்றும் செவ்வாய்க்கிழமை ( 28 இந்திய வெளியுறவுச் செயலாளர் […]

செய்தி பொழுதுபோக்கு

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்

  • July 31, 2026
  • 0 Comments

தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி அவரது 7வது வயதில் ‘தியாகய்யா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார். குழந்தைத் தனமான குரலுக்கு சொந்தக்காரரான ஜமுனா தமிழில் 1952ல் […]

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 12 (Host) நகரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுதி செய்துள்ளது. செய்தி விளையாட்டு

2027 ஒருநாள் உலகக்கோப்பை:12 மைதானங்களை உறுதி செய்தது ஐசிசி

  • July 31, 2026
  • 0 Comments

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 12 (Host) நகரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுதி செய்துள்ளது. மொத்தம் நடைபெறவுள்ள 54 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க், செஞ்சுரியன், டர்பன், கெபர்ஹா, குகொம்போ சிட்டி, கேப் டவுன், பார்ல் மற்றும் புளோம் போன்டைன் ஆகிய எட்டு நகரங்களில் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி ‘வாண்டரர்ஸ்’ அல்லது ‘நியூலேண்ட்ஸ்’ மைதானத்தில் நடத்தப்படும். சிம்பாப்வேயின் ஹராரே, புலவாயோ மற்றும் விக்டோரியா […]

உலகம்

முக்கியக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து

  • July 31, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கியக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். பனிப்போர் கால பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை (DPA) பயன்படுத்தி அவர் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளார். தொழிற் கழிவுகளில் உள்ள முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய தனிமங்களைத் தக்கவைக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமான முக்கிய கனிமங்களின் […]

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

ஸ்ரீலங்கா பொலிஸா, ஜே.வி.பி. பொலிஸா? நாமல் கடும் சீற்றம்

  • July 31, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கு விசாரணையொன்றிற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா பொலிஸ், இன்று ‘ஜே.வி.பி. பொலிஸாக’ மாற்றப்பட்டுள்ளது. பொலிஸார் சமர்ப்பிக்கும் […]

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். செய்தி

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: மலையகத்தில் சோகம்

  • July 31, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த முத்து நாராயணசாமி (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் ரட்னகரிய தோட்டத்தில், தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக […]

உலகம்

ஆர்ஜென்டினா மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டினரை நாடுகடத்த தீர்மானம்

  • July 31, 2026
  • 0 Comments

ஆர்ஜென்டினாவின் தேசிய நலனை பாதிக்கும் வகையில் செயற்படும் வெளிநாட்டினரை நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நாட்டின் மக்களுக்கு எதிராக பாகுபாடு அல்லது வன்முறையைத் தூண்டுவதாகக் கருதப்படும் வெளிநாட்டினரை  உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் ஆணையில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜாவியர் மிலே (Javier Milei) கையொப்பம் இட்டுள்ளார். FIFA உலகக் கோப்பை போட்டியை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் மீது வெறுப்புணர்ச்சி கருத்துக்கள் அதிகம் பிரயோகிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை அர்ஜென்டினாவின் குடிவரவுச் சட்டத்தை கணிசமாக […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவுப் பற்றாக்குறை – விலை உயர்வுக்கு சாத்தியம்

  • July 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 07 முக்கிய பகுதிகளில் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளதுடன், உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையானது  பல்பொருள் அங்காடிகளில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், நுகர்வோருக்கான மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கும் வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் வெங்காயம் போன்ற வயல் காய்கறிகள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. சில விவசாயிகள் விளைச்சலில் 20 சதவீதம் வரை குறைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். […]