ஆசிய சந்தையில் சரிந்தது எண்ணெய் விலை!
உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கள் கிழமையன்று ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
சர்வதேச தரக்குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 4.8 சதவீதம் சரிந்து, ஒரு பேரல் 83.18 டாலராகக் குறைவடைந்துள்ளது.
அமெரிக்க சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை சதவீதம் சரிந்து, ஒரு பேரல் 80.13 டாலராக வர்த்தகமானது.
கடந்த பெப்ரவரி மாதம் மாதம் போர் தொடங்குவதற்கு முன்பு 70 டாலராக இருந்த எண்ணெய் விலை, போரின் உச்சக்கட்டத்தில் 120 டாலர் வரை எகிறியிருந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த சரிவு உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
அதிகாரப்பூர்வ கையெழுத்து விழா!
வரும் வெள்ளிக்கிழமை, ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் இந்த அமைதி உடன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்து விழா நடைபெறும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான உடன்பாடு இறுதி செய்யப்பட்டுள்ளதை ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி உறுதிப்படுத்தியுள்ளார்.





