எரிசக்தி நெருக்கடி தீரும்: EU நம்பிக்கை!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான அமைதி ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
இந்த உடன்படிக்கை ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த ஆழமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதோடு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தணிக்க உதவும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் Kaja Kallas குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது உலகப் பொருளாதாரத்திற்கும் பிராந்திய நிலைத்தன்மைக்கும் மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு உலக நாடுகளிடையே ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.





