ஐரோப்பா

செல்வந்த நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக அணிதிரண்ட மக்கள்!!

பிரான்ஸில்  G7  உச்சிமாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் செல்வந்த நாடுகளின் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains)  என்ற சுற்றுலா நகரில் இன்று G7  உச்சிமாநாடு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய கிழக்கு போர், உக்ரைன் மற்றும் உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள்.

உலக நாடுகளின் தலைவர்கள் எவியானுக்குச் செல்வதற்கு முன்பு ஜெனீவா விமான நிலையத்திற்கு வருகை தருவார்கள்.

அவ்வாறு வரும் தலைவர்களுக்கு தங்களின் எதிர்பை வெளிப்படுத்தும் வண்ணம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது பாட்டில்கள், கற்கள், சிமெண்ட் துண்டுகள் மற்றும் பட்டாசுகளை வீசியுள்ளனர்.

இதற்குப் பதிலடியாக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 20000 போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக ஜெனீவா காவல்துறை செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் பிராஹியர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்