இலங்கை செய்தி

மீண்டும் வந்தாள் ‘யாழ் தேவி’!

  • May 11, 2026
  • 0 Comments

காலநிலை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையிலான ‘யாழ். தேவி’ ரயில் சேவை, நான்கு மாத இடைவேளைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.40 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட யாழ். தேவி ரயில், பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தச் சேவை ஆரம்பமானதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. யாழ். […]

இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : மஞ்சள் எச்சரிக்கை!

  • May 11, 2026
  • 0 Comments

வங்காள விரிகுடாவில் நிலவிய வளிமண்டலக் கோளாறு, ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது 10.1° வடக்கு மற்றும் 82.5° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் அமைந்துள்ளது என்றும், எனவே மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரித்துள்ளதுடன், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாட்டைச் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற […]

இந்தியா

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு!!

  • May 11, 2026
  • 0 Comments

தமிழக முதமைச்சர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவருக்கு  Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று (11) முதல் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த Z+ பாதுகாப்பு படைப் பிரிவில் 55 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 24 மணிநேரமும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும், முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றம் 24 மணிநேரமும் கடும் பாதுகாப்பு  வழங்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் – 32 தொழிற்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாகக் கோரிக்கை

  • May 11, 2026
  • 0 Comments

உள்ளாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தேர்தல்களில் கட்சி சந்தித்த கடும் தோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என தற்போது தொழிற்கட்சியின் 403 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Catherine West, பிரதமரின் புதிய உரை பலனளிக்கவில்லை என்றால் அவரது தலைமையைக் கேள்விக்குட்படுத்துவேன் என எச்சரித்துள்ளார். இதனிடையே படிப்படியான மாற்றங்கள் போதாது என ஒப்புக்கொண்டுள்ள ஸ்டார்மர், நாட்டின் பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கான  புதிய திட்டங்களை விரைவில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: ஸ்டாலினை சந்தித்தார் விஜய்!

  • May 11, 2026
  • 0 Comments

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் முதலில் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார். இதனையடுத்து முதல்வர் ஜோசப் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஹண்டா வைரஸ்: ஆஸ்திரேலியர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு!

  • May 11, 2026
  • 0 Comments

MV Hondius என்ற சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் (Hantavirus) பரவியதை அடுத்து, அதில் பயணம் செய்த ஆஸ்திரேலிய பிரஜைகளை தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொற்று பாதிப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் பெர்த் நகருக்கு அருகில் உள்ள புல்ஸ்ப்ரூக் (Bullsbrook) தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட உள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவது அரிதானது என்றாலும், அதன் தீவிரத்தன்மை காரணமாக அவர்களுக்கு மூன்று வார கால கட்டாய தனிமைப்படுத்தல் […]

இந்தியா செய்தி

அசாம் மாநில முதல்வர் நாளை பதவியேற்பு!

  • May 11, 2026
  • 0 Comments

அசாம் மாநில முதல்வராக 2ஆவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா, நாளை பதவியேற்கவுள்ளார். அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126 இல் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், குவாஹாட்டியில் என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அரசாங்கத்தின் கடன் வாங்கும் செலவுகள் அதிகரிப்பு

  • May 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் கடன் வாங்கும் செலவுகள் இன்று காலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக நிதி சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் மற்றும் பிரதமர் Starmer மீது ஏற்பட்ட அரசியல் அழுத்தங்களுக்கு முதலீட்டாளர்கள் பதிலளித்ததன் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு கடன் பெறும்போது செலுத்த வேண்டிய வட்டி விகிதமான பத்திர ஈட்டுத்தொகை, 4.9689% வரை உயர்ந்தது. இது வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சிறிய ஆனால் முக்கியமான உயர்வாகும். […]

உலகம் செய்தி

அரசியலில் அக்கினிப் பரீட்சையை எதிர்கொண்டுள்ள பிரதமர்!

  • May 11, 2026
  • 0 Comments

லேபர் கட்சியை 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி வழிநடத்திய Keir Starmer பிரதமர், தற்போது தலைமைத்துவம் தொடர்பில் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளார். மிகப்பெரிய நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் அரியணையேறிய ஸ்டார்மர், பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கூட முடியாத நிலையிலேயே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மற்றும் அவருக்கு எதிராகக் கடினமாகியுள்ள பொதுமக்களின் மனநிலை ஆகியவற்றால், அவரது அரசியல் வாழ்வில் இனி வரும் காலப்பகுதி அக்கினிப்பரீட்சையாகவே அமையக்கூடும். கடந்த 30 வருடங்களில் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 09 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு

  • May 11, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு லெபனானிலுள்ள ஒன்பது பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவத்தின்  அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார். சாத்தியமான இராணுவத் தாக்குதல்களை முன்னிட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அர்-ரிஹான், ஜர்ஜூவா, கஃபர் ரெமான், அல்-நுமைரியா, அரப் சலீம், அல்-ஜுமைஜிமா, மக்ஹாரா, குலைலே மற்றும் ஹரூஃப் உள்ளிட்ட பகுதிகள் இந்த எச்சரிக்கையின் கீழ் வருகின்றன.