உலகம் செய்தி

பிரதமரின் உரையில் அடிப்படை தீர்வுகள் பற்றிய விளக்கம் போதாது – UNISON தலைவர் குற்றச்சாட்டு

  • May 11, 2026
  • 0 Comments

பிரதமர் Starmer இன்று ஆற்றிய உரையை பிரித்தானியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூனிசன் (UNISON) அமைப்பின் பொதுச் செயலாளர் ஆண்ட்ரியா ஈகன் (Andrea Egan) விமர்சித்துள்ளார். நிலைமையைச் சரிசெய்வதற்கான அடிப்படையான தீர்வுகள் குறித்து மிகவும் குறைவாகவே பேசப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். மாற்றத்தின் வேகம் போதுமானதாக இல்லை என்பதை ஸ்டார்மர் ஒப்புக்கொண்டது சரியானது என கூறிய அவர் மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மாற்றத்தின் அவசியத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொண்டார் என்பதை அவரது உரை காட்டவில்லை” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மரினால் மூன்று முக்கிய கொள்கை வாக்குறுதிகள் அறிவிப்பு

  • May 11, 2026
  • 0 Comments

பிரதமர் Starmer ஆற்றிய உரை, தொழிலாளர் கட்சிக்குள் எழுந்த தலைமைச் சவாலை தடுக்கக் கூடிய ஒரு முக்கிய தருணமாகப் பார்க்கப்படுகிறது. அவர் “தவறுகள் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டதுடன், தன்னை சந்தேகிப்பவர்களை தவறென நிரூபிப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் அவர் தனது உரையில் மூன்று முக்கிய கொள்கை வாக்குறுதிகளை முன்வைத்தார். முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை வலுப்படுத்தி, பிரித்தானியாவை “ஐரோப்பாவின் மையத்தில்” வைத்திருக்க அரசாங்கம் முயற்சி செய்யும் என கூறினார். அடுத்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் “பிரித்தானியாவுக்கான புதிய திசை” அமைக்கப்படும் […]

உலகம்

ஜப்பான் ரயில் பெட்டியில் தெளிக்கப்பட்ட மர்மப்பொருள் – பயணிகளுக்கு நேர்ந்த துயரம்!

  • May 11, 2026
  • 0 Comments

ஜப்பானில் ரயிலில் பயணித்த 10 பேர் திடீரென நோய்வாய்ப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த ரயிலில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தெளிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே பயணிகள் நோய்வாய்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பயணிகள் விசித்திரமான வாசனை மற்றும் தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றை எதிர்கொண்டதாக முறைப்பாடு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த ரயில்   கவாசாகி நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

யாழ். தையிட்டி வீதி விவகாரம்: மே 21 ஆம் திகதி தீர்ப்பு!

  • May 11, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும் என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி, தற்போது விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த வீதியை மீட்கும் நோக்குடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி அளவீடு செய்யப்பட்டது. வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்ற விகாராதிபதிக்கு பிரதேச […]

செய்தி

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு தமிழரசுக் கட்சி வலியுறுத்து!

  • May 11, 2026
  • 0 Comments

“நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளின் அதிகாரம் அதிகாரிகளின் பிடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல் மாத்திரமன்றி, […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் இடையூறு தொடர்ந்தால் வாரந்தோறும் 10 கோடி பீப்பாய் எண்ணெய் இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை

  • May 11, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் இடையூறுகள் தொடர்ந்தால் உலக எண்ணெய் சந்தையில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சவூதி அரேபியாவின் Saudi Aramco தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார். நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து குறைந்ததால், ஒவ்வொரு வாரமும் சுமார் 10 கோடி பீப்பாய் எண்ணெய் சந்தையிலிருந்து இழக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலை மேலும் சில வாரங்கள் நீடித்தால், அடுத்த ஆண்டுவரை எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் அவர் […]

உலகம்

மெக்சிகோ எல்லையில் 06 சடலங்கள் மீட்பு!

  • May 11, 2026
  • 0 Comments

டெக்சாஸின் லாரெடோவில் (Laredo) ரயில் பெட்டியொன்றில் இருந்து 06 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூர ரயில் யார்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இந்த உடல்களை  கண்டறிந்தார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்து சடலங்களை கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவர்களின் பூர்வீகம் வெளியிடப்படவில்லை. அதேநேரம் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு அருகில் இதேபோன்ற சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்தோர் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

ஐரோப்பா செய்தி

ஸடார்மருக்கு எதிராக தலைமைப் போட்டியைத் தொடங்கத் தயார் – கேத்தரின்

  • May 11, 2026
  • 0 Comments

தொழிலாளர் கட்சிக்குள் தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் Catherine பிரதமர் Starmerக்கு எதிராக தலைமைப் போட்டியைத் தொடங்கத் தயார் என தெரிவித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர் ஸ்டார்மருக்கு எதிராக நேரடியாக போட்டியிட முன்வராவிட்டால், தானே தலைமைப் போட்டிக்கான பெயரை முன்வைப்பேன் என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை சற்று மாற்றி, இன்று பிரதமரின் உரையின் பின்னர் திருப்தி இல்லையெனில் நாடாளுமன்ற தொழிலாளர் கட்சிக்கு என் பெயரை […]

இலங்கை செய்தி

மஹிந்த நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

  • May 11, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் கூறியுள்ளார். இருப்பினும், சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால், இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் இது தொடர்பில் ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு புத்தகம் வழங்கிய சீமான்!

  • May 11, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார். சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் […]