தெற்கு லெபனானில் 09 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு
தெற்கு லெபனானில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு லெபனானிலுள்ள ஒன்பது பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சாத்தியமான இராணுவத் தாக்குதல்களை முன்னிட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அர்-ரிஹான், ஜர்ஜூவா, கஃபர் ரெமான், அல்-நுமைரியா, அரப் சலீம், அல்-ஜுமைஜிமா, மக்ஹாரா, குலைலே மற்றும் ஹரூஃப் உள்ளிட்ட பகுதிகள் இந்த எச்சரிக்கையின் கீழ் வருகின்றன.




