இந்தியா செய்தி

அசாம் மாநில முதல்வர் நாளை பதவியேற்பு!

அசாம் மாநில முதல்வராக 2ஆவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா, நாளை பதவியேற்கவுள்ளார்.

அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126 இல் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

இதன்மூலம் இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், குவாஹாட்டியில் என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இதன் மூலம் சர்மா 2-வது முறையாக முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி